மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வாழை பட டிரைலர் நாளை வெளியாக இருக்கிறது.
இயக்குனர் மாரி செல்வராஜ் காலத்தால் அழியாத படங்களைத் தந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அந்த வகையில் இவர் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்கள் இன்று வரையிலும் பேசப்படுகிறது. அதைத்தொடர்ந்து இவர் வாழை எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் மாரி செல்வராஜின் வாழ்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார நிறுவனம் தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணனின் இசையிலும் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவிடம் இப்படம் தயாராகி இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 23ஆம் தேதி உலகம் முழுவதும் இப்படம் திரையிடப்பட உள்ளது. அதே சமயம் படக்குழுவினர் அடுத்தடுத்த பாடல்களையும் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் நாளை (ஆகஸ்ட் 19) வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இயக்குனர் மாரி செல்வராஜ், விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.