spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஒரு நீள் இரவின் யுத்தம்.... மிரட்டலான மத்தகம் ட்ரெய்லர் வெளியீடு!

ஒரு நீள் இரவின் யுத்தம்…. மிரட்டலான மத்தகம் ட்ரெய்லர் வெளியீடு!

-

- Advertisement -

அதர்வா மற்றும் மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள மத்தகம் வெப் தொடரின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.

மத்தகம் வெப் தொடரில் அதர்வா கதாநாயகனாக நடிக்க மணிகண்டன் வில்லனாக நடித்துள்ளார். 100, ட்ரிகர் உள்ளிட்ட படங்களுக்கு பிறகு அதர்வா இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அதர்வாவிற்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் கௌதம் வாசுதேவ் மேனன் திவ்யதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த வெப் தொடரை தயாரித்துள்ளது. தர்புகா சிவா இதற்கு இசையமைத்துள்ளார்.

we-r-hiring

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் மிரட்டலான டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ளதாக இந்த ட்ரெய்லர் மூலம் தெரிய வந்துள்ளது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

மேலும், மத்தகம் வெப் தொடர் வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதி தமிழ் ,தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், பெங்காலி, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ