அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்ட படம் தான் புஷ்பா 2 – தி ரூல். செம்மரக்கட்டை தொடர்பான கதைக்களத்தில் உருவாகி உள்ள இந்த படத்தினை சுகுமார் இயக்கியிருக்கிறார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா தி ரைஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இந்த படம் தற்போது வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சாம் சி எஸ் இந்த படத்தின் பின்னணி இசைக்கான பணிகளை கவனித்துள்ளார். படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும் வில்லனாக பகத் பாசிலும் நடித்திருக்கின்றனர். நடிகை ஸ்ரீலீலா பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளார். புஷ்பா முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வந்தது. அதேபோல் முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுன் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார். மேலும் பகத் பாசில் அவருக்கு இணையாக தனது வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார்.
இந்த படம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் வெளியான முதல் நாளில் இப்படம் உலகம் முழுவதும் 294 கோடி வரை வசூல் செய்திருந்தது. அதை தொடர்ந்து இரண்டாவது நாளில் இப்படம் 449 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். குறுகிய நாட்களில் அதிவேகமாக வசூலை வாரிக் குவித்து வரும் புஷ்பா 2 திரைப்படம் இன்னும் சில நாட்களில் ஆயிரம் கோடியை நெருங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -


