ரஜினிகாந்த் ரசிகர்கள் விழா நிறுத்திவைப்பு
ரஜினிகாந்த் ரசிகர்கள் விழாவான ’மனிதம் காத்து மகிழ்வோம்’ நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்திற்க்கு அவருடைய ரசிகர்கள் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டு அதற்கான விழாவை வரும் மார்ச் 26-ம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்த முடிவு செய்திருந்தனர். ‘மனிதம் காத்து மகிழ்வோம்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்திற்கு பாராட்டு மற்றும் நலிந்த ரஜினி ரசிகர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவிருந்தது.
26-ம் தேதி நடைபெறும் அந்த விழாவில் ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி, சினிமா துறையில் இருந்து சில பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஜினி ரசிகர்கள் சார்பில் நடக்கவிருந்த மனிதம் காத்து மகிழ்வோம் நிகழ்ச்சி தவிர்க்க முடியாத காரணங்களால் நிறுத்திவைக்கப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார். சிரமத்திற்கு மன்னிக்கவும், தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் அவர்களிடத்தில் நேரில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.