Homeசெய்திகள்சினிமாஎங்கள ஆசிர்வாதம் பண்ணுங்க, திடீரென காலில் விழுந்த மணமக்கள்... அதிர்ச்சியான ரஷ்மிகா!

எங்கள ஆசிர்வாதம் பண்ணுங்க, திடீரென காலில் விழுந்த மணமக்கள்… அதிர்ச்சியான ரஷ்மிகா!

-

- Advertisement -

நடிகை ரஷ்மிகா தற்போது சில படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தியில் ரன்பீர் கபூர் உடன் அனிமல் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்திப் ரெட்டி வங்கா இயக்கி வருகிறார்.

அதையடுத்து அல்லு அர்ஜுன் உடன் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் ரெயின்போ என்ற பெண் மையக் கதாபாத்திரம் கொண்ட படத்திலும் ரஷ்மிகா நடித்து வருகிறார்.

மறுபக்கம் சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ரஷ்மிகா தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் தனது உதவியாளரின் திருமணத்தில் ரஷ்மிகா கலந்து கொண்டார். மணமக்கள் இருவரையும் வாழ்த்தும் போது அவர்கள் இருவரும் திடீரென ரஷ்மிகாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். அவர்கள் திடீரென காலில் விழுந்ததும் செய்வதரிதாகாமல் அதிர்ச்சி அடைந்தார் ரஷ்மிகா.

பின்னர் இருவரும் பல்லாண்டு காலம் நீடூடி வாழ்க என்று வாழ்த்தினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ