Homeசெய்திகள்சினிமாA.P.J. அப்துல் கலாமிற்கு சமர்ப்பணம்.... ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்ட 'ராக்கெட் டிரைவர்' படக்குழு!

A.P.J. அப்துல் கலாமிற்கு சமர்ப்பணம்…. ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்ட ‘ராக்கெட் டிரைவர்’ படக்குழு!

-

அப்துல் கலாமிற்கு சமர்ப்பண வீடியோவை ராக்கெட் டிரைவர் படக்குழு வெளியிட்டுள்ளது.A.P.J. அப்துல் கலாமிற்கு சமர்ப்பணம்.... ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்ட 'ராக்கெட் டிரைவர்' படக்குழு!

நடிகை சுனைனா ஆரம்பத்தில் தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றி வந்தவர். இவர் தமிழில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து மாசிலாமணி, நீர்ப்பறவை போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக ரெஜினா என்ற திரைப்படத்திலும் இன்ஸ்பெக்டர் ரிஷி என்ற வெப் தொடரிலும் நடித்திருந்தார். அடுத்தது இவர் ராக்கெட் டிரைவர் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஸ்ரீராம் சந்திரசேகர் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். படத்தில் சுனைனாவுடன் இணைந்து விஷ்வந்த், நாக விஷால், காத்தாடி ராமமூர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். காமெடி கலந்த கதை களத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற அக்டோபர் 18ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

ஏற்கனவே இந்த படத்தின் டீசர், ட்ரெய்லர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று (அக்டோபர் 15) A.P.J. அப்துல் கலாம் ஐயா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அப்துல் கலாமிற்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக ஸ்பெஷல் வீடியோ ஒன்றை ராக்கெட் டிரைவர் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ