யோகி பாபுவின் ‘போட்’ படத்தை பாராட்டிய சீமான்!
யோகி பாபு, மண்டேலா படத்திற்கு பிறகு தொடர்ந்து பல படங்களை ஹீரோவாக நடித்து வருகிறார். அதே சமயம் வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அடுத்ததாக யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் போட் திரைப்படம் இன்று (ஆகஸ்ட் 2) வெளியாகிறது. இந்த படத்தை இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் போன்ற படங்களின் மூலம் வெற்றி கண்ட சிம்பு தேவன் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் யோகி பாபு, கௌரி கிஷன், எம் எஸ் பாஸ்கர், சின்னி ஜெயந்த், மதுமிதா போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படமானது சர்வைவல் காமெடி திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. எனவே இன்று இந்த படத்தைக் காண ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் போட் படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த நடிகரும் அரசியல்வாதியுமான சீமான் படத்தையும் படக்குழுவினரையும் பாராட்டியுள்ளார். “நடிகர் யோகி பாபு மிகவும் அருமையாக நடித்திருக்கிறார். ஒரு சிறிய படகு பயணம் தான். ஆனால் இது சாதாரண படம் அல்ல. சிம்பு தேவன் மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். இந்த படத்தைப் பார்க்கும்போது ஒரு இயக்குனராக அவர் பட்ட கஷ்டம் தெரிகிறது. அவ்வளவு சிரமப்பட்டு எடுத்திருக்கிறார். இன்று நாம் அனைவரும் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகளை படம் முழுவதும் அழகாக சொல்லி இருக்கிறார்.
#Boat பற்றி அண்ணன் திரு சீமான் அவர்களின் இதயம் கனிந்த பாராட்டுக்கள்🙏🙏@iYogiBabu @maaliandmaanvi @hombalefilms @Madumkeshprem @SakthiFilmFctry @sakthivelan_b @Gourayy pic.twitter.com/dAOLvq0xhQ
— Chimbu Deven (@chimbu_deven) August 1, 2024
நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல கருத்துள்ள படம் பார்த்த மகிழ்ச்சி இருக்கிறது. டைட்டானிக் படத்தை பார்த்து பிரமித்தது போல இந்த படமும் இருக்கிறது. டைட்டானிக் படம் பெரிய படம். ஆனால் அதற்கு இணையான படம் தான் போட். அந்த அளவு இந்த படத்திற்காக சிரமப்பட்டு இருக்கிறார்கள். இசையமைப்பாளர் ஜிப்ரான் பின்னணி இசையில் பெரும் பங்களிப்பு கொடுத்துள்ளார். இப்படி ஒரு கதையை ஒரு படகு பயணத்தில் சொல்லணும் என்கிற துணிச்சலே அசாத்தியமானது. படக்குழுவினர்களுக்கு என்னுடைய அன்பு வாழ்த்துக்கள்” என்று பாராட்டியுள்ளார்.