சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் அமரன் திரைப்படத்திலிருந்து ஹே மின்னலே பாடல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவர் ஆவார். அதன்படி இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவருடைய படங்கள் பெரும்பாலும் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும். பொதுவாக சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியாகும் படங்கள் நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால் தற்போது உருவாகியுள்ள அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனின் மற்ற படங்களைப் போல் அல்லாமல் சீரியஸான எமோஷனல் கலந்த கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது.இந்த படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி இருக்கும் அமரன் திரைப்படம் வருகின்ற அக்டோபர் 31 தீபாவளி தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தினை ரங்கூன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் படத்தினை தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடிக்க அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இருந்து ஹே மின்னலே எனும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்தப் பாடலை ஹரிசரண் மற்றும் ஸ்வேதா மோகன் பாடி இருக்கும் நிலையில் கார்த்திக் நேதா இந்தப் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.