- Advertisement -
நடிகர் சிவகார்த்திகேயன் கோலிவுட்டில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரது நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் அயலான், இப்படத்தை ரவிக்குமார் இயக்கி இருந்தார். நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த இத்திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இப்படத்தைத் தொடர்ந்து, அவரது நடிப்பில் தற்போது அமரன் படம் உருவாகி வருகிறது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்குகிறார். படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதனிடையே, சிவகார்த்திகேயன் தனது 23-வது படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். அனிருத் படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தின் பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்றது. படப்பிடிப்பும் தொடங்கி இருக்கிறது.




