“செளத் இண்டியன் சினி டெலிவிஷன் ஆர்டிஸ்ட்ஸ் அண்ட் டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியன்” கட்டடத்திற்கு மீண்டும் சீல் வைக்கப்பட்டது!
அடுத்தகட்ட பணிக்காக, கட்டிட உரிமையாளருக்கு நீதிமன்றம் கொடுத்த கால அவகாசம் நிறைவடைந்ததால், மாநகராட்சி அதிகாரிகள் மீண்டும் சீல் வைத்தனர்!
சென்னை கே.கே.நகர் விஜயராகவபுரம், காமராஜ் நகர் 4 ஆவது தெருவில் உள்ள செளத் இண்டியன் சினி டெலிவிஷன் ஆர்டிஸ்ட்ஸ் அண்ட் டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியன் கட்டடத்திற்கு, மாநகராட்சியிடம் இருந்து முறையான அனுமதி பெறவில்லை என புகார் எழுந்தது.
மாநகராட்சியின் பல கட்ட விசாரணையிலும், தகுந்த ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை மேலும் நீதிமன்ற உத்தரவு படி சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மார்ச் 11ஆம் தேதி இந்த கட்டிடத்திற்கு சீல் வைத்தனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரக்கூடிய நிலையில் வரும் 17 ஆம் தேதி வரை அலுவலகத்தை திறந்து அதன் உரிமையாளர்கள் அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்ளலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி கடந்த மார்ச் 29 ஆம் தேதி, கே.கே நகர் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கப்பட்டிருந்த அலுவலகத்தைத் திறந்து செளத் இண்டியன் சினி டெலிவிஷன் ஆர்டிஸ்ட்ஸ் அண்ட் டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியன் செக்ரட்டரி கதிரவன் பாலுவிடும் சாவியை ஒப்படைத்தனர்.
மேலும் 18ஆம் தேதி நீதிமன்ற உத்தரவுபடி மீண்டும் இந்த அலுவலகத்திற்கு சீல் வைக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து சென்றுள்ளனர். அதன் படி மீண்டும் இன்று அந்த கட்டிடத்திற்கு சீல் வைக்கப்பட்டது.