Homeசெய்திகள்சினிமாரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம்... டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய பிரபல ஓடிடி தளம்.... ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம்… டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய பிரபல ஓடிடி தளம்….
- Advertisement -
ரஜினிகாந்த் நடித்திருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி தளம் கைப்பற்றி இருக்கிறது.

தமிழ் திரையுலகில் ஸ்டைல் எனும் வார்த்தை பிரபலமாக்கிய பெருமை ரஜினிகாந்திற்கு உண்டு. கோலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினி, நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் சுமார் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனையும் படைத்து. இதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் வேட்டையன்.

சூர்யாவை வைத்து ஜெய்பீம் என்ற பெரிய ஹிட் படத்தை கொடுத்த ஞானவேல், வேட்டையன் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்து உள்ளது. படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். ரஜினியுடன் சேர்ந்து அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், மஞ்சு வாரியார், துஷாரா விஜயன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மாதம் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இத்திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது. இ்ந்நிலையில், வேட்டையன் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைம், அதிக விலை கொடுத்து வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.