spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகவனம் ஈர்ப்பதே பெரும் சவாலாக உள்ளது - நடிகை டாப்ஸி

கவனம் ஈர்ப்பதே பெரும் சவாலாக உள்ளது – நடிகை டாப்ஸி

-

- Advertisement -
திரைத்துறையில் கவனம் ஈர்ப்பதே பெரும் சவாலாக உள்ளதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை டாப்ஸி. இவர் தற்போது இந்தியில் பிசியாக வலம் வந்தாலும், அவர் தமிழ் மொழியிலும் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர். தமிழில் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமாகினார். இப்படத்தில், அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜீவாவுடன் வந்தான் வென்றான், மறந்தேன் மன்னித்தேன், வலை, ஆரம்பம், வை ராஜா வை, முனி 3, கேம் ஓவர், திரைப்படங்களில் நடித்தார். இறுதியாக அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் அனபெல் சேதுபதி. விஜய் சேதுபதியுடன் சேர்ந்து அப்படத்தில் நடித்திருப்பார்.

we-r-hiring
தமிழில் மட்டுமன்றி தெலுங்கிலும் அவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் நடித்துக் கொண்டிருக்கும்போதே, இந்தியிலும் அவர் கவனம் செலுத்த தொடங்கினார். தற்போது இந்தியிலும் அவர் டாப் நடிகையாக வலம் வருகிறார். இறுதியாக ஷாருக்கான் நடித்த டன்கி படத்தில் அவருக்கு ஜோடியாக டாப்ஸி நடித்திருப்பார். திரைப்படங்களில் மட்டுமன்றி அவ்வப்போது, சமூக பிரச்சனைகள் தொடர்பாகவும் டாப்ஸி குரல் கொடுத்து வருகிறார். இந்தி திணிப்பு உள்ளிட்ட சமூக பிரச்சனைகள் குறித்தும் நடிகை டாப்ஸி பேசி உள்ளார்.

இந்நிலையில், திரைத்துறையில் பின்பற்றப்படும் சில நடைமுறைகளுக்கு எதிராக குரல் எழுப்பி இருக்கிறார். இது தொடர்பாக பேசிய அவர், குறைந்த பட்ஜெட் படங்கள் திரைக்கு வந்து வரவேற்பை பெறுவதில் பெரும் சிக்கல்களை அனுபவிக்கின்றன. சிலர் குறைந்த பட்ஜெட் திரைப்படங்கள் தரமாக இல்லை என்று முத்திரை குத்திவிடுகின்றனர். இதனால், சிறிய பட்ஜெட் படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது பெரும் சவாலாக உள்ளதாக தெரிவித்தார்.

MUST READ