spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளை வென்ற நட்சத்திரங்கள்

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளை வென்ற நட்சத்திரங்கள்

-

- Advertisement -
கடந்த 2015-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டன.

அதன்படி, சிறந்த திரைப்படங்களுக்கான முதல் பரிசிற்கு தனி ஒருவன், இரண்டாம் பரிசிற்கு பசங்க 2, மூன்றாம் பரிசிற்கு பிரபா மற்றும் நான்காவது பரிசிற்கு இறுதிச் சுற்று ஆகிய திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டன. சிறப்பு பரிசுக்காக ஜோதிகா நடித்த 36 வயதினிலே திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது. இது தவிர சிறந்த நடிகராக மாதவன், சிறந்த நடிகையாக ஜோதிகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு பரிசு நடிகர் கௌதம் கார்த்திக்கிற்கும், ரித்திகா சிங்கிற்கும் அறிவிக்கப்பட்டன. மேலும், சிறந்த இயக்குநருக்கான விருதுக்கு சுதா கொங்கரா தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், தேர்வு செய்யப்பட்ட திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. முத்தமிழ் மன்றத்தில் நடந்த விழாவில் மாநில செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் எம்.பி.சுவாமிநாதன் மற்றும் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு விருது வழங்கி கவுரவித்தனர்..இதில் மொத்தம் 39 விருதுகள் வழங்கப்பட்டன. இதில் 36 வயதினிலே படத்தில் நடித்த ஜோதிகாவுக்கு சிறந்த நடிகை உள்பட கிட்டத்தட்ட 7விருதுகள் வழங்கப்பட்டன. நடிகை ஜோதிகா விருதுகளை பெற்றுக்கொண்டார்.
we-r-hiring

அதேபோல, இயக்குநர் சுதா கொங்கராவும் விருதை பெற்றுக்கொண்டார். மேலும், தனி ஒருவன் படத்திற்காக சிறந்த கதையாசிரியர் விருதை மோகன் ராஜா பெற்றுக்கொண்டார். இதுதவிர, சிறந்த வில்லன் நடிகருக்கான விருதை அரவிந்த்சாமி, தனி ஒருவன் படத்திற்காக பெற்றுக்கொண்டார். இதேபோல, மற்ற சிறந்த திரைப்படங்களுக்கும், கலைஞர்களுக்கும் விருது வழங்கப்பட்டன

MUST READ