விடாமுயற்சி
நடிகர் அஜித் துணிவு படத்திற்கு பிறகு விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படமானது கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு அஜர்பைஜானில் பரபரப்பாக நடைபெற்று வந்தது. அதன் பின்னர் படத்திற்கு சிறிய இடைவெளி விடப்பட்டது. எனவே நடிகர் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். இந்த படத்தின் படப்பிடிப்புகளும் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அடுத்ததாக நடிகர் அஜித் விடாமுயற்சி படத்தின் இறுதி கட்டப்படப்படிப்பில் இணையாய் இருக்கிறார். விடாமுயற்சி இறுதி கட்ட படப்பிடிப்பு இந்த ஜூன் மாதம் இறுதியில் அஜர்பைஜானில் நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் பட குழுவினர் படப்பிடிப்பை விரைவாக முடித்துவிட்டு படத்தை 2024 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர். இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு படப்பிடிப்பு நிறைவடைந்ததற்கு பின்னர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கங்குவா
நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து நடிகர் சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படமானது 3D தொழில்நுட்பத்தில் மிகப்பிரமாண்டமாக அதிக பொருட்செலவில் தயாராகி இருக்கிறது. அதேசமயம் படமானது பத்துக்கும் அதிகமான மொழிகளில் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது படமானது ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் இந்த படத்தை தீபாவளியை முன்னிட்டு வெளியிடப் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. எனவே இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
விடுதலை 2
வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான விடுதலை படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது விடுதலை இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படமானது 2024 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று புதிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிஸ் – கவின் 06
கவின் நடிப்பில் கடைசியாக ஸ்டார் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக கவின் மாஸ்க், பிளடி பெக்கர் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார் கவின். இந்த படத்திற்கு கிஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படமும் தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
எல்ஐசி – LIC
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் எல்ஐசி. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் தவிர எஸ் ஜே சூர்யா, கிரித்தி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சிங்கப்பூர், மலேசியா போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் திரைப்படமும் தீபாவளி ரேசில் இணையும் என்று சமீப காலமாக செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.