Homeசெய்திகள்சினிமாட்ரிபிள் ஆக்சனில் மிரட்டும் டொவினோ தாமஸ்.....புதிய பட போஸ்டர் வெளியீடு!

ட்ரிபிள் ஆக்சனில் மிரட்டும் டொவினோ தாமஸ்…..புதிய பட போஸ்டர் வெளியீடு!

-

- Advertisement -

ட்ரிபிள் ஆக்சனில் மிரட்டும் டொவினோ தாமஸ்.....புதிய பட போஸ்டர் வெளியீடு!இன்றைய இளைய தலைமுறை நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் டொவினோ தாமஸ். மலையாள நடிகரான இவர் தமிழில் தனுஷின் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்துள்ளார். சினிமாவில் மட்டுமல்லாது இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல ரசிகர்கள் இவர் மீது அளவுக்கதிகமான அன்பு வைத்துள்ளனர். சமீபத்தில் கூட இவரது நடிப்பில் வெளியான 2018, மலையாள சினிமா மட்டும் இன்றி பல இந்திய மொழி ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தது. நேற்று (ஜனவரி 21) இவருடைய 35வது பிறந்தநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக இவர் நடிக்கும் புதிய படமான “அஜயண்டே ரண்டம் மோஷனம்” திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலானது. இதுவரை பார்த்திராத மூன்று புதிய கதாபாத்திரத்தில் டொவினோ இப்படத்தில் நடித்துள்ளார். இந்த மூன்று கதாபாத்திரமே போஸ்டரில் காட்டப்பட்டுள்ளது. ட்ரிபிள் ஆக்சனில் மிரட்டும் டொவினோ தாமஸ்.....புதிய பட போஸ்டர் வெளியீடு!மூன்று கதாபாத்திரங்களும் ஆக்சன் கலந்த ரோலாக இருக்கும் எனத் தெரிகிறது. மணியன், அஜயன், குஞ்சுகெளு என்னும் பெயர்களுடன் மூன்று டொவினோ தாமசை நாம் திரையில் பார்க்க உள்ளோம். பீரியட் ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தை 3D தொழில்நுட்பத்தில் வெளியிட உள்ளனர். 2024 ஓணம் பண்டிகை முன்னிட்டு படம் திரையரங்கில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மலையாள இயக்குனர் ஜித்தின் லால் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான “கல்கி”என்னும் ஆக்சன் படத்தையும் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ