Homeசெய்திகள்சினிமாகிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்!

கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்!

-

- Advertisement -

பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்!

நடிகர் விஜய் தற்போது தனது 69ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஹெச். வினோத் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படமானது அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கி வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்திருந்தார். அதேசமயம் தளபதி 69 படம் தான் தனது கடைசி படம் எனவும் தெரிவித்துள்ளார். நடிகர் விஜயின் அரசியல் வருகைக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதன்படி நடிகர் விஜயின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார். அடுத்தது முக்கிய தலைவர்களின் பிறந்தநாள், பண்டிகைகள் போன்ற முக்கியமான நிகழ்வுகளில் ஒரு அரசியல் தலைவராக பொது மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார் விஜய். கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்!அதன்படி இன்று (டிசம்பர் 25) கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “இயேசு கிறிஸ்து பிறந்த இந்த நன்நாளில் அனைவரது இல்லங்களிலும் அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமாதானம் நிலைத்து நீடித்திருக்கட்டும். அனைவருக்கும் என் அன்பான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ