Homeசெய்திகள்சினிமாஎங்கே இருக்கிறார் நடிகர் ஸ்ரீ? ..... செல்போனில் தொடர்பு கொண்ட லோகேஷ் கனகராஜ்!

எங்கே இருக்கிறார் நடிகர் ஸ்ரீ? ….. செல்போனில் தொடர்பு கொண்ட லோகேஷ் கனகராஜ்!

-

- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஶ்ரீ. எங்கே இருக்கிறார் நடிகர் ஸ்ரீ? ..... செல்போனில் தொடர்பு கொண்ட லோகேஷ் கனகராஜ்!அந்த தொடரில் நடித்த பலருக்கும் சினிமா வாய்ப்புகள் கிடைத்தது. அதேபோன்று நடிகர் ஸ்ரீக்கும் சினிமா வாய்ப்பு கிடைக்க வழக்கு எண் 18/9 என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரையில் அறிமுகமானார் ஸ்ரீ. இந்த படத்தில் இவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. அதைத்தொடர்ந்து ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சோன் பப்டி, வில் அம்பு ஆகிய படங்களிலும் நடித்தார். கடைசியாக இவர் விக்ரம் பிரபு, விதார்த் நடிப்பில் வெளியான இறுகப்பற்று திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில் இவர் தமிழ் சினிமாவின் ட்ரெண்டிங் இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாநகரம் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். எங்கே இருக்கிறார் நடிகர் ஸ்ரீ? ..... செல்போனில் தொடர்பு கொண்ட லோகேஷ் கனகராஜ்!இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் நடிகர் ஸ்ரீ சமீபத்தில் திடீரென வீடியோ ஒன்றினை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது நடிகர் ஸ்ரீ மெலிந்த தோற்றத்தில் மிகவும் பரிதாபமான நிலையில் காணப்பட்டார். அதாவது அவர் மன நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஸ்ரீ நடித்த சில படங்களின் தயாரிப்பாளர்கள் ஸ்ரீக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றி விட்டதால் மன அழுத்தத்தில் அவர் தனியாகவே வசித்து வருகிறார் எனவும் நண்பர்கள் பலரும் அவரை தொடர்பு கொண்டபோது அவர் யாரிடமும் பேசுவதில்லை எனவும் ஸ்ரீ நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எங்கே இருக்கிறார் நடிகர் ஸ்ரீ? ..... செல்போனில் தொடர்பு கொண்ட லோகேஷ் கனகராஜ்!இந்நிலையில் தான் லோகேஷ் கனகராஜும் தன்னுடைய நண்பர்களிடம் ஸ்ரீயைப் பற்றி விசாரித்து அவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டாராம். ஆனால் எத்தனை முறை தொடர்பு கொண்ட போதும் ஶ்ரீ, லோகேஷ் கனகராஜிடம் பேசவே இல்லையாம். நடிகர் ஸ்ரீ எங்கே இருக்கிறார் என்று கூட யாருக்குமே தெரியவில்லை என்று கூறுகின்றனர். ஆனால் ஸ்ரீ, தன்னுடைய அம்மாவிற்கு மட்டும் அடிக்கடி தொடர்பு கொண்டு அவருடைய குரலை மட்டும் கேட்டுவிட்டு போனை வைத்து விடுவார் என்றும் சிலர் கூறுகின்றனர். எனவே ஸ்ரீயின் நண்பர்களும் உறவினர்களும் அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

MUST READ