நடிகர் யோகி பாபு ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக திரைத்துறையில் நுழைந்தவர். தற்போது இவர் நகைச்சுவை நடிகராகவே நடித்து வந்தாலும் பல படங்களில் ஹீரோவாகவும் கலக்கி வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக போட் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை சிம்பு தேவன் இயக்கியிருந்த நிலையில் படமானது ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி நடை போட்டு வருகிறது.
அதே சமயம் நடிகை லட்சுமிமேனன் கும்கி, சுந்தரபாண்டியன் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் கடைசியாக சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து சப்தம் எனும் திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார் லட்சுமிமேனன்.
இந்நிலையில் யோகி பாபு, லட்சுமி மேனன் கூட்டணியில் புதிய படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு மலை என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை சீனு ராமசாமி மற்றும் சுசீந்திரன் ஆகிய இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஐபி முருகேஷ் இயக்கியிருக்கிறார். கொங்கனி மலையில் நடந்த உண்மை சம்பவத்தை பின்னணியாக கொண்டு இந்த படம் தயாராகி இருக்கிறது.
லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தேனி ஈஸ்வர இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் யோகி பாபு, லட்சுமிமேனன் தவிர காளி வெங்கட், சிங்கம் புலி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து வருகின்ற செப்டம்பர் மாதம் இப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் மோஷன் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.