புழல் சுற்றுபகுதியில் மெத்தபெட்டமைன் விற்பனையில் ஈடுபட்ட எஸ்ஐ கணவர், காங்கிரஸ் நிர்வாகி உட்பட 6பேர் கைது. ஆன்லைன் ஆப் மூலம் விற்பனை செய்ய முயன்றார்களா என போலீஸ் விசாரணை.

சென்னை பாடி மேம்பாலம் அருகே மெத்தபெட்டமைன் போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் பாடி மேம்பாலம் அருகே கண்காணிப்பில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை மடக்கி பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அரசால் தடை செய்யப்பட்ட மெத்தபெட்டமைன் எனப்படும் போதை பொருளை வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து இருவரை கைது கைது செய்து புழல் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் சிறு சிறு பொட்டலங்களாக மாற்றி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. தீவிர விசாரணையில் இந்த பொருட்களை வாங்கி நகரின் பல முக்கிய விஐபிக்களின் வாரிசுகளுக்கும் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இருவர் கொடுத்த தகவலின் மேலும் 4பேரை போலீசார் கைது செய்தனர்.
வண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பை சேர்ந்த குமரவேல் (45), காவாங்கரையை சேர்ந்த பார்த்திபன் (40), ஓட்டேரி சேர்ந்த அமீர் பாஷா (23), காவங்கரையை சேர்ந்த தீபேஷ் (24), திருவேற்காடு சேர்ந்த சுபாஷ் (27), நுங்கம்பாக்கம் சேர்ந்த மைக்கேல் (30) ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் விசாலாட்சி என்பவருடைய கணவர் குமரவேல் என்றும், புழல் காங்கிரஸ் கட்சியின் வட்டத் தலைவர் பார்த்திபன் எனவும் தெரிய வந்தது. 3கிராம் மெத்தபெட்டமைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ஆன்லைன் ஆப் மூலம் விற்பனை செய்ய முயன்றார்களா என தொடர்ந்து 6 பேரிடம் புழல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரபல ரவுடி சம்பவம் செந்திலின் கூட்டாளிகள் திருந்தி வாழ வாய்ப்பு கேட்டு மனு