spot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்கடத்தல்காரர்களிடம் பணத்தை பதுக்கிய 8 போலீசார்… டிஐஜி அதிரடி!

கடத்தல்காரர்களிடம் பணத்தை பதுக்கிய 8 போலீசார்… டிஐஜி அதிரடி!

-

- Advertisement -

கடத்தல்காரர்களிடம் பறிமுதல் செய்த பணத்தை பதுக்கிய விவகாரத்தில் கரூரில், காவல் ஆய்வாளர் உட்பட 8 போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடி மாற்றம்.

பெங்களூரில் இருந்து மதுரைக்கு கார் மூலம்  தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் கரூர் வழியாக கடத்தப்படுவதாக வெங்கமேடு போலீசாருக்கு கடந்த ஜனவரி 30 ஆம் தேதி தகவல் கிடைத்துள்ளது.இந்த தகவலையடுத்து  வெங்கமேடு போலீசார் கரூர் குளத்துப்பாளையம் மேம்பாலம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

we-r-hiring

கடத்தல்காரர்களிடம் பணத்தை பதுக்கிய 8 போலீசார்… டிஐஜி அதிரடி! சோதனையின் போது, ஒரு காருக்குள் 168 கிலோ எடை கொண்ட ரூபாய் 1.32 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்த போலீசார்,  இந்த போதைப் பொருளை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலம் ஜலால் பகுதியைச் சேர்ந்த கேவர்சன் (27), ஹரிராம் (27), சுரேஷ் (19) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.தொடர்ந்து மூவரையும் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கேவர்சன் உள்ளிட்ட மூன்று பேரிடம் போலீசார் குட்கா பறிமுதல் செய்த போது அவர்கள் வைத்திருந்த ரூ. 1.25 லட்சம் பணத்தை பறித்துக் கொண்ட வெங்கமேடு காவல் ஆய்வாளர் மணிவண்ணன் உள்ளிட்ட எட்டு பேரும் பணத்தை கணக்கில் காட்டாமல் பதுக்கியதாக புகார் எழுந்தது.

கடத்தல்காரர்களிடம் பணத்தை பதுக்கிய 8 போலீசார்… டிஐஜி அதிரடி! இதையடுத்து அவர்கள் எட்டு பேரிடம் திருச்சி சரக காவல்துறை தலைவர் வருண் குமார் விசாரணை மேற்கொண்டார். இதில் காவல் ஆய்வாளர் மணிவண்ணன், தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் உதயகுமார், தான்தோன்றி மலை காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார், வெங்கமேடு காவல் உதவி ஆய்வாளர் சித்ராதேவி, வெங்கமேடு தலைமை காவலர் ரகுநாத், வெங்கமேடு காவலர் உதயகுமார், கரூர் நகர காவல் நிலைய காவலர்கள் விக்னேஷ், தம்பிதுரை ஆகிய 8 பேரும்  குட்கா கடத்தி வந்த கும்பலிடம் ‘ பறிமுதல் செய்த பணத்தை  பதுக்கியது தெரியவந்தது.

இதையடுத்து காவல் ஆய்வாளர் உட்பட எட்டு பேரும் காத்திருப்பார் பட்டியலுக்கு மாற்றி டிஐஜி நடவடிக்கை எடுத்துள்ளார்.

MUST READ