spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்பெற்ற மகளையே கழுத்து அறுத்து கொலை செய்த கொடூர தந்தை!

பெற்ற மகளையே கழுத்து அறுத்து கொலை செய்த கொடூர தந்தை!

-

- Advertisement -

காட்டு மன்னார் கோவில் அருகே பெற்ற தந்தையே மகளை கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.பெற்ற மகளையே கழுத்து அறுத்து கொலை செய்த கொடூர தந்தை!கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவிலை அடுத்த டி.மடப்புரம் கிராமத்தை சேர்ந்த அர்ஜுனன் (46) என்பவா் கூலித் தொழிலாளியாக பணி புரிந்து வருகிறாா். இவருக்கு இரண்டு மகன்கள், மற்றும் ஒரு மகள் உள்ளனா். இதில் மகள் அபிதா(27)  பட்டப்படிப்பு படித்து முடித்து விட்டு அதே கிராமத்திலேயே ஆசிரியையாக பணி புரிந்து வந்துள்ளாா். அர்ஜுனன் கடந்த சில மாதங்களாக தன் மகள் அபிதாவிற்கு மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளாா். ஆனால், அபிதா காதல் விவகாரத்தில் ஈடுபட்டு உள்ளதால், திருமணத்தை தள்ளி போட்டு வந்துள்ளாா். இதனால் தந்தைக்கும், மகளுக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.பெற்ற மகளையே கழுத்து அறுத்து கொலை செய்த கொடூர தந்தை!இந்நிலையில், நேற்று அர்ஜுனனின் மனைவி ரேஷன் கடைக்கு சென்றுள்ளாா். அர்ஜுனன், அபிதா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளனா். அப்போது, மகள் அபிதா தந்தை அர்ஜுனனிடம் தனது காதல் விவிகாரத்தை தெரியப்படுத்தி உள்ளாா். தனது காதலா் வேறு சாதியை சோ்ந்தவா் என்றும் கூறியுள்ளாா்.  அர்ஜுனன் அபிதாவின் காதலை ஏற்கவில்லை. எவ்வளவே எடுத்துக் கூறியும் மகள் அபிதா கேட்கவில்லை. நான் அவரைத் தான் திருமணம் செய்வேன் என்று வாக்குவாதத்தில் ஈடுப்பட்டாா். வாக்கு வாதம் முற்றவே ஆத்திரமடைந்த அர்ஜுனன், அபிதாவை கட்டையால் தாக்கியும், பேனா கத்தியால் கழுத்தை அறுத்தும் கொலை செய்துள்ளாா்.பெற்ற மகளையே கழுத்து அறுத்து கொலை செய்த கொடூர தந்தை!உடனே கிராமத்தினா் காட்டுமன்னாா் கோவில் காவல் நிலையத்திற்கு மகளை தந்தையே கொலை செய்துள்ளாா் என புகாா் அளித்தனா். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிந்து அர்ஜுனனை தேடும் முயற்சியில் ஈடுபடும் போது அவரே காவல் நிலையத்தில் சரண் அடைந்தாா்.

“இன்று டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த 12 தமிழர்களை அமைச்சர் நாசர் வரவேற்றார்….”

MUST READ