வளசரவாக்கம் பகுதியில் வீட்டில் குட்கா பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்த வீட்டு உரிமையாளர் கைது. பெங்களூரிலிருந்து குட்கா பொருட்களை வாங்கி வந்து சென்னையில் விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது.
சென்னை வளசரவாக்கம் கைகான்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன்(54) இவர் கடைகளுக்கு மொத்தமாக பீடி சிகரெட் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் வாடகை காரில் பெங்களூர் சென்று குட்கா பொருட்களை ஏற்றிய வந்து விற்பனை செய்து வந்துள்ளனர்,
நேற்று இரவு வளசரவாக்கம் கைகான்குப்பம், பாரதி தெருவில் உள்ள அன்பழகன் வீட்டில் போலீசார் சோதனை செய்த போது வீட்டின் முதல் மாடியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. 165.45 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
பின்னர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அன்பழகன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பட்டினம்பாக்கம் பகுதி சேர்ந்த வாசு என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
வீட்டில் சோதனைகள் மேற்கொண்டு 165.45 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், கூலிப், விமல் உள்ளிட்ட குட்கா பாக்கெட்டுகள் மற்றும் 1 ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட அன்பழகன் மற்றும் வாசு விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
போலீஸ் என்ற திமிரில் அடுத்தவன் மனைவியிடம் தகராறு; ஜெயிலுக்கு போவதற்கும் வெட்கப்படவில்லை