மேட்டூர் அருகே சாலையில் நடந்து சென்றவரை கடிக்க வந்த நாயை கம்பைக் கொண்டு விரட்டியடித்த மருத்துவா் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சமீபகாலமாக நாய்கள் சிறுகுழந்தைகள் முதல் பெரியோா் வரை கடித்து வருகின்றன. இதனால் அதனை கட்டுப்படுத்த பலரும் பல கோாிக்கைகள் வைத்தனா். எனவே நாய்கள் கடிப்பதை கட்டுப்படுத்த அரசு தெருநாய்களுக்கு ரோபிஸ் தடுப்பூசி போடும் பணியை மேற்க் கொண்டது. அதுமட்டுமல்லாமல் பல்வேறு முயற்சிகளையும் அரசு மேற்க் கொண்டு வருகின்றது.
இந்நிலையில், மேட்டூர் அருகே மேச்சேரி பகுதியில், அரசு மருத்துவர் குமார்(39) என்பவா் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது வளா்ப்பு நாய் ஒன்று கடிக்க வந்துள்ளது. குமாா் தன்னை கடிக்க வந்த வளர்ப்பு நாயை கம்பைக் கொண்டு விரட்டியடித்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த மீது நாயின் உரிமையாளர் மாதேஷ் மற்றும் அவரது தாய் பாப்பா(60) அரசு மருத்துவா் குமாாின் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மருத்துவரின் தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பம் தொடா்பாக நாயின் உரிமையாளா் மீது புகாா் அளிக்கப்பட்டது. அந்த புகாாின் அடிப்படையில் அரசு மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
