கீழ்பாக்கம் பகுதியில் பெண்ணிடம் பகுதி நேர வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4,62,130/- ஆன்லைன் மூலம் பெற்று மோசடி செய்த பெங்களூருவைச் சேர்ந்த பெண் கைது.மண்ணடி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் லட்சுமி என்பவர் கடந்த 13.06.2024-ம் தேதி சென்னை பெருநகர காவல், கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளாா். அந்த புகாரில் லட்சுமியின் இன்ஸ்டாகிராமிற்கு 05.06.2024-ம் தேதி பகுதி நேர வேலை சம்மந்தமாக லிங்க்குடன் இணைந்த குறுஞ்செய்தி வந்துள்ளது.
அந்த லிங்கைஐ கிளிக் செய்தவுடன் ஒரு டெலிகிராம் செயலியில் இணைக்கப்பட்டுள்ளாா். பின்னர் அதில் தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் அதில் கொடுக்கப்படும் டாஸ்குகளை முடித்து லாபம் பெறலாம் என்று கூறியதை நம்பி அதில் கொடுக்கப்பட்ட டாஸ்குகளை முடித்துள்ளாா். அதனால் சிறிது பணம் பெற்றள்ளாா். அதனைத் தொடர்ந்து கொடுக்கப்பட்ட Task களை முடிக்க வேண்டி அடையாளம் தெரியாத நபர் கூறிய வங்கி கணக்குகளுக்கு மொத்தம் ரூபாய். 4,62,130/- அனுப்பியுள்ளாா்.

பின்னர் அதன் மூலம் எவ்வித பணமும் கிடைக்கப்பெறாததால் லட்சுமி தான் ஏமாற்றப்பட்டதை அறிந்துள்ளாா். எனவே அடையாளம் தெரியாத நபர் மீது நடவடிக்கை மேற்கொண்டு இழந்த பணத்தை மீட்டுத் தருமாறு கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளாா். அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரனை மேற்கொண்டனர்.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி பயன்படுத்திய வங்கிக் கணக்கு விபரங்கள், அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றின் ஐ பி(IP) விபரங்கள் மற்றும் அதன் Network User Id முகவரி ஆகியவற்றை பெறப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளி கர்நாடகா மாநிலத்தில் இருப்பது பற்றிய விபரம் தெரிய வந்தது.
அதன் அடிப்படையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், அவர்கள் உத்தரவின் பேரில் கனம் கூடுதல் காவல் ஆணையாளர் (சென்னை தெற்கு) அவர்கள் மற்றும் சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையாளர் அவர்களின் ஆலோசனையின் பேரில் மேற்படி குற்றவாளியை பிடிக்க கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு வழக்கின் குற்றவாளியான லில்லி புஷ்பா என்பவரை 25.06.2025 ம் தேதி கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வைத்து கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன் மற்றும் 2 ATM கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் லில்லி புஷ்பா பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவது தெரியவந்தது.
விசாரணைக்குப்பின்னர் கைது செய்யப்பட்ட லில்லி புஷ்பா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
வாக்குறுதி அளித்து ஏமாற்றுவதே தொழிலாக கொண்டுள்ளது திமுக அரசு-அன்புமணி இராமதாஸ் கண்டனம்