Homeசெய்திகள்க்ரைம்இன்ஸ்டாகிராமில் பழக்கமான நபரால் சிறுவன் கடத்தல் - 3 நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

இன்ஸ்டாகிராமில் பழக்கமான நபரால் சிறுவன் கடத்தல் – 3 நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

-

- Advertisement -

12-ம் வகுப்பு மாணவனை கடத்தி 1 லட்சம் பணம் மற்றும் 100 கிராம் தங்க நகைகள் கேட்டு‌, அவனது குடும்பத்திற்கு கடத்தல்காரர்கள் மிரட்டல் விடுத்துள்ளனா்.இன்ஸ்டாகிராமில் பழக்கமான நபரால் சிறுவன் கடத்தல் - 3 நபர்களுக்கு போலீசார் வலைவீச்சுசென்னை ஏழுகிணறு சேவியர் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது 17 வயது மகன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சிறுவனை முக்கிய விஷயம் பேச வேண்டும். ஆகையால் நேரில் வருமாறு தொடர்ந்து கேட்டுள்ளார்.

நேற்று முன்தினம் மீண்டும் அந்த நபர் இன்ஸ்டாகிராமில் சிறுவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி நேரில் வா உன்னிடம் பேச வேண்டும் என வற்புறுத்தியதால், சிறுவன் அன்று இரவு தனது உறவினரின் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு இன்ஸ்டா நண்பர் கூறியது போல் முத்தையால் பேட்டை மதுரவாசல் தெருவில் உள்ள ஒரு டீக்கடை அருகில் காத்திருந்துள்ளான்.

நீண்ட நேரம் அங்கு காத்திருந்தும் யாரும் வராததால், சிறுவன் இன்ஸ்டாகிராமில் அந்த நபரை‌ தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டுள்ளான். அப்போது டீக்கடையில் சிகரெட் பிடித்து கொண்டிருந்த ஒருவர் இளைஞர் அவசரமாக செல்லவேண்டும் என கூறி லிஃப்ட் கேட்டுள்ளார்.

17 வயது சிறுவனும் இளைஞரை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்ற நிலையில் சிறிது தூரம் சென்றதும் அங்கு நின்றிருந்த ஆட்டோ முன்பு நிறுத்துமாறு தெரிவித்துள்ளார். உடனே சிறுவன் பைக்கை நிறுத்தியவுடன் அந்த நபர் மற்றும் ஆட்டோவில் இருந்த மூன்று நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி சிறுவனை ஆட்டோவில் ஏறுமாறு கூறி, கடத்தி சென்று ஸ்டான்லி மருத்துவமனை பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் சிறுவனிடம் கத்தியை காட்டி மிரட்டி அடித்து ஒரு வாரத்தில் ஒரு லட்ச ரூபாய் பணமும், 100 கிராம் தங்க நகை கொடுக்க வேண்டும் என்று கூறி, அவனது‌ குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர், சிறுவனை அழைத்து வந்து அதே இடத்தில் இறக்கி விட்டு விட்டு நான்கு நபர்களும் ஆட்டோவில் தப்பிச் சென்றுள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட சிறுவன் இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தான். அவனது பெற்றோர் இது தொடர்பாக முத்தையால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இன்ஸ்டாகிராம் ஐடியை ஆய்வு செய்து 4 நபர்களையும் தேடி வருகின்றனர்.

ரேஷன் கடையில் கொடூரம்! ஜாமீனில் வெளிவந்த வாலிபர் கொலை – நான்கு பேர் கைது

 

MUST READ