மாதவரத்தில் துணிகரம் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 100 சவரன் நகை பத்தாயிரம் பணம் ஒரு கார் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.
மாதவரம் ஸ்ரீராம் நகர் சீனிவாசன் நகரில் குடியிருப்பு பகுதியில் கீழ்தளத்தில் வசித்து வருபவர் ஷாஜகான் வயது 47 இவர் ரெட்டேரி பகுதியில் கலர் மீன் மற்றும் மீன்களுக்கு தேவையான உணவு வகைகளை தயாரித்து விற்று வருகிறார். இவருக்கு சொந்தமான வீட்டில் தன்னுடைய உறவினர்கள் ஏழு பேர்கள் உள்ளார்கள்.
இந்நிலையில் தனது வீட்டில் அருகில் உள்ள மற்றொரு வீட்டிற்கு புதியதாக பால் காய்ச்சுவதற்காக நேற்று இரவு 10 மணியளவில் தனது வீட்டை பூட்டிக்கொண்டு அந்த வீட்டிற்கு சென்றுள்ளார்கள் .பின்னர் இன்று காலை வீட்டிற்கு வந்தவுடன் வீட்டின் முன்பக்க கிரில் கேட் கதவு உடைக்கப்படும் பீரோவில் உள்ள பொருட்கள் சிதறியும் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பீரோவில் உள்ளே பார்த்ததில் அங்கு நகைகள் வைக்கப்பட்டிருந்த பெட்டியும் காணாமல் போயிருந்தது .அதில் உள்ள நகைகள் சுமார் 100 பவுன் என கூறப்படுகிறது. மேலும் அதன் அருகில் இருந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தையும் வெளியே நிறுத்தி இருந்த காரையும் காணாததால் அதிர்ச்சியில் உறைந்தார் .
இது குறித்து உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். தகவலின் பெயரில் அங்கு விரைந்து வந்த கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் பாண்டியராஜன் உதவி ஆணையாளர் சகாதேவன் மாதவரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சம்பவம் நடந்த இடத்தில் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆராய்ந்து தனிப்படை அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இதுகுறித்து மாதவரம் குற்றப்பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
ஆந்திராவில் இருந்து கடத்தப்பட்ட 1.18 டன் குட்கா பறிமுதல் – சென்னை வாலிபர் கைது