Homeசெய்திகள்க்ரைம்சென்னை : உறங்கிக் கொண்டிருந்த நண்பர் மீது லாரி ஏற்றி இறக்கிய சம்பவம்

சென்னை : உறங்கிக் கொண்டிருந்த நண்பர் மீது லாரி ஏற்றி இறக்கிய சம்பவம்

-

சென்னை : உறங்கிக் கொண்டிருந்த நண்பர் மீது லாரி ஏற்றி இறங்கிய சம்பவம்கொரட்டூரில் உறங்கிக் கொண்டிருந்த நண்பர் மீது லாரி ஏற்றி இறக்கிய சம்பவம், டிரைவர் கைது.

உத்திரமேரூர் முத்துமாரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வினோத்(35). இவரது நண்பர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இருவரும் டிம்பர் லாரி ஓட்டி வருகின்றனர். நேற்று இரவு (01.09.2024)இருவரும் கொரட்டூர் கேனல் சாலையில் லாரியை நிறுத்தி உணவருந்திவிட்டு ஓய்வெடுத்துள்ளனர். இதில், வினோத், பிரபாகரனின் லாரியின் பின்பக்கத்தில் சென்று உறங்கியுள்ளார்.

டி.என்.பிஎஸ்.சி குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

அப்போது பிரபாகரன் லாரியை எடுக்க முயன்ற போது, வினோத் மீது லாரி ஏறி இறங்கியது. இதில் அவர் உடல்நசுங்கி உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வினோத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பினர். பின், வழக்கு பதிவு செய்து பிரபாகரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ