spot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்சித்தூர் இரட்டை கொலை வழக்கு… ஐந்து பேருக்கு மரண தண்டனை…

சித்தூர் இரட்டை கொலை வழக்கு… ஐந்து பேருக்கு மரண தண்டனை…

-

- Advertisement -

சித்தூர் மேயர் கொலை வழக்கில் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு 18 பேரை விடுதலை செய்து சித்தூர் நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது.சித்தூர் இரட்டை கொலை வழக்கு… ஐந்து பேருக்கு மரண தண்டனை…ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பிரபலமான காங்கிரஸ் கட்சியின் சித்தூர் எம்.எல்.ஏ சி.கே பாபு மற்றும் தெலுங்கு தேச கட்சியின் கட்டாரி மோகன் நாயுடு ஆகிய இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், தாய் மாமனான கட்டாரி மோகனுக்கு ஆதரவாக மும்பையில் இருந்து களத்தில் சித்தூர்  வந்த சிண்டு  சி.கே.பாபு  மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.  இதில்  2 பேர் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து உயிர் இழந்தனர். இந்த அதிர்ச்சி முடிவதற்குள் சில நாட்களிலேயே சி.கே. பாபு காரின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இதில் பலத்த காயங்கள் அடைந்த சித்தூர் எம்.எல்.ஏ. சி.கே.பாபு மற்றும் ஆதரவாளர்கால் இருவர் என மூன்று பேர் படுகாயங்களுடன் உயிர்த் தப்பினர்.

அதன் பின்பு பல்வேறு தாக்குதல் சம்பவங்களிலிருந்து தப்பித்த சி.கே. பாபு  காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி டெல்லியில் அமித்ஷா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இந்த  சம்பவங்களுக்காக தன்னுடைய தாய் மாமனுக்காக களம் இறங்கிய சிண்டு தெலுங்கு தேசம் ஆட்சி 2014 ஆம் ஆண்டு அமைந்த பிறகு சித்தூர் மாநகராட்சிக்கு மேயராக தன்னுடைய அத்தை அனுராதா கட்டாரி மோகன் பதவியேற்றார். பதவி ஏறிய பிறகு சிண்டுக்கும் மேயர் குடும்பத்திற்கு இடையே விரிசல் ஏற்பட்டது. இதனால்  2015 ஆம் ஆண்டு சித்தூர்  மேயர் அலுவலகத்தில் புகுந்த சிண்டு மற்றும் ஆதரவாளர்கள் மேயரான அனுராதா மற்றும் அவருடைய கணவர் கட்டாரி மோகன் நாயுடு இருவர் மீது துப்பாக்கியால் சுட்டும் அருவாளால் வெட்டியும்  படுகொலை செய்து அங்கிருந்து தப்பி சென்றனர். இதனை அடுத்து சித்தூரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது இவ்வழக்கில் இரண்டு மாதங்கள் கழித்து  சிண்டு போலீசார் முன்னிலையில் சரணடைந்தார்.

we-r-hiring

இரட்டை கொலை வழக்கில் மொத்தமாக 21 பேர் கைது செய்யப்பட்டு, இதுவரை 122 பேர் வரை போலீசார் விசாரணை செய்தனர். கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கில்  சந்திரசேகர் என்கிற சிண்டு, வெங்கடாசலதி என்கிற முல்பாகல் வெங்கடேஷ், ஜெயபிரகாஷ் ரெட்டி, தோட்டி மஞ்சுநாத், வெங்கடேஷ் ஆகியோரை குற்றவாளிகள் என முடிவு செய்து அவர்கள் ஐந்து பேருக்கும் மரண தண்டனை விதித்து மற்ற மீதமுள்ள 18 பேரை விடுவித்து ஒன்பதாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஸ்ரீனிவாச ராவ் தீர்ப்பு வழங்கினார்.

தமிழர்களுக்கு எதிராக பிரதமர் மோடி பேச்சு கண்டனத்திற்குரியது – மாணிக்க தாகூர் எம்.பி

 

MUST READ