Homeசெய்திகள்க்ரைம்காதலியை வெட்டிக் கொன்ற காதலன்!

காதலியை வெட்டிக் கொன்ற காதலன்!

-

காதலியை வெட்டிக் கொன்ற காதலன்!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே ராதாபுரம் கிராமத்தை சேர்ந்த துப்புரவு பணியாளர் செல்வி என்பவரின் மகள் தரணி(வயது 19) என்பவர் இன்று காலை வீட்டின் அருகே நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத நபரால் வெட்டுப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.

murder

கொலை செய்யப்பட்ட நபர் சென்னையில் தனியார் கல்லூரியில் நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரவாண்டி காவல்துறையினர் இளம்பெண் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் காவல்துறை விசாரணை செய்ததில் காதல் விவகாரத்தில் கொலை நடந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதனை தொடர்ந்து எஸ்.பி ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் விரைந்து சென்று கொலையாளியான பக்கத்து ஊரான மதுரபக்கத்தைச் சேர்ந்த கணேசன்(25) என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து போலீசார் அவனை தேடி சென்றப்போது புதுவை மாநிலம் திருக்கனூர் பகுதியில் பகுதியில் பதுங்கி இருந்த கணேசனை விக்கிரவாண்டி போலீசார் கைது செய்தனர். மேலும் அவனிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்துள்ளனர். கொலை நடந்த இரண்டு மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக விக்கிரவாண்டி காவல்துறையினர் விசாரணை செய்ததில் இருவரும், கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், பின்னர் ஒரு வருடமாக தரணி, இவரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் தரணி மீது ஆத்திரமடைந்த கணேசன், கொலை செய்தது தெரியவந்தது. ஆரம்பத்தில் இருவரும் காதலித்து வந்த நிலையில், கணேசன் கஞ்சா மதுவிற்கு அடிமையாகி பாதை மாறி போனதால், தரணி கடந்த ஓர் ஆண்டாக அவருடன் பேசுவதை நிறுத்தி உள்ளார். இதன் காரணமாகவே இளம்பெண்ணை கொலை செய்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

MUST READ