Homeசெய்திகள்க்ரைம்தமிழகம், ஆந்திராவில் போலி கல்விச் சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்த நான்கு பட்டதாரிகள் கைது.

தமிழகம், ஆந்திராவில் போலி கல்விச் சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்த நான்கு பட்டதாரிகள் கைது.

-

தமிழகம், ஆந்திராவில் போலி கல்விச் சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்து வந்த  நான்கு பட்டதாரிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கலேம் சாய் ராம் ரெட்டி என்பவர் வேலைக்காக அமெரிக்கா செல்வதற்காக விசா கேட்டு சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். அதன் பேரில் கடந்த நவம்பர் 16ஆம் தேதி அவர் நேர்முகத் தேர்வுக்கு சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அழைக்கப்பட்டார்.

தமிழகம், ஆந்திராவில் போலி கல்விச் சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்த நான்கு பட்டதாரிகள் கைது.

Kallem Sai ram Reddy தாக்கல் செய்த கல்வி பணி அனுபவ சான்றிதழ்களை        ( Educational Certificate of Andhra University, Visagapattinam BSC Computer Science Degree Certificate, Provisional Certificate, Mark Sheet, Migration Certificated, Senior Secondary School Certificates, Provisional Certificate and Migration cum Transfer Certificate of National Institute of Open Schooling, Govt. Of India and also employment documents of Blue Verse Technologies, Hyderabad) ஆய்வு செய்தபோது அவை போலியானவை என தெரிய வந்தது.

தமிழகம், ஆந்திராவில் போலி கல்விச் சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்த நான்கு பட்டதாரிகள் கைது.

இதையடுத்து அவரை சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசாரிடம் அமெரிக்க தூதரக அதிகாரிகள் ஒப்படைத்தனர்.  கலேம் சாய்ராம் ரெட்டியிடம்   நடத்திய விசாரணையில் சித்தூரில் சித்தார்த்தா கன்சல்டன்சி சர்வீஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் Rusheekesh Reddy மற்றும் திவாகர் Reddy  கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

மத்திய குற்றப்பிரிவு தனிப்படையினர் ஆந்திர மாநிலம் சித்தூருக்கு சென்று Rushhkesh Reddy மற்றும் Dhivakar Reddy ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் Rusheekesh Reddy என்பவர் B.E (ECE) படித்தவர் என்பதும் திவாகர் ரெட்டி பிடெக் பட்டதாரி எனவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இருவரும்  SWANK Store என்ற பெயரில் தனித்தனியாக ஜவுளிகடை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழகம், ஆந்திராவில் போலி கல்விச் சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்த நான்கு பட்டதாரிகள் கைது.

குறுகிய காலத்தில் பெரிய பணக்காரராக வேண்டும் என்ற நோக்கத்தில் Hyderabad, Ameer Pettai-ல் Siddhartha Consultancy என்ற பெயரில் ஒரு அலுவலகம் தொடங்கி வெளிநாடு செல்பவர்களுக்கு போலியான கல்வி சான்றிதழ்கள் மற்றும்  பணி அனுபவ சான்றிதழ்களை சுலேகா ( suleka) ஆப் மூலம் தங்கள் கன்சல்டன்சியை தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு  சென்னை வில்லிவாக்கத்திலிலுள்ள Mohammed Riyaz மற்றும் Maheshwaran நடத்திவரும் IIISTR (Indian Institute of Integrated Science & Technology and Research) நிறுவனம் மூலமாக போலி சான்றிதழ்களை பெற்று கொடுத்ததாக தெரிவித்துள்ளனர்.

தமிழகம், ஆந்திராவில் போலி கல்விச் சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்த நான்கு பட்டதாரிகள் கைது.

அதன் அடிப்படையில் சென்னை வில்லிவாக்கத்திலுள்ள IIISTR என்ற போலியான கல்வி நிறுவனத்தை நடத்திவரும் Mohammed Riyaz மற்றும் Maheshwaran ஆகியோரை கைது செய்தனர்.போலி ஆவணங்கள் தயார் செய்ய வைத்திருந்த LG 4 CPUs, 2 Monitors, 2 Laptops, 2 Tabs, 8 Mobile Phones, Epson Colour Printer-1 Kalinga University, IIISTR ) Indian Institute of Integrated Science & Technology and Research), Shine University, Swami Vivekanandha Board of Secondary and Hr.Sec Education School  போலி கல்வி நிறுவனங்களின் சான்றிதழ்கள்  கைப்பற்றப்பட்டன.

எம்.பி.ஏ. பட்டதாரி மகேஸ்ரவன், ஆன்லைன் டிஸ்டன்ஸ் ( தொலைதூரக் கல்வி) எஜுகேஷன்  என்று முதலில் ஒரு போலியான கல்வி நிறுவனத்தை தொடங்கியுள்ளார். சமூக வலைதள மூலம் நண்பரான பிஇ பட்டதாரியான ரியாஸ்,  மகேஸ்வரனை தொடர்பு கொண்டு இந்த மோசடி தொழிலில் தனக்கு முன் அனுபவம் இருக்கிறது, இருவரும் இணைந்து இந்த தொழிலை விரிவு படுத்தலாம் என பேசி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த போலி கல்வி நிறுவனத்தை 2019 முதல் நடத்தி வருவதாகவும், தங்களுக்கு டெல்லி மற்றும் ஹைதராபத்திலும் இது போன்ற ஏஜென்டுகளுடன் தொடர்புள்ளதாகவும், தெரிவித்துள்ளனர். பிஇ சர்டிபிகேட்டுக்கு ஒன்றரை லட்சம் ரூபாயும், இதர பட்டப்படிப்புகளுக்கு ஒரு லட்ச ரூபாயும், டிப்ளமோ படிப்பு சான்றிதழுக்கு 75 ஆயிரம் ரூபாயும் வாங்கியுள்ளனர். இது தவிர பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், பிரபல நிறுவனங்களின் பெயரில் பணி அனுபவ சான்றிதழ் என தங்களுடைய தொழில்நுட்ப அறிவை வைத்து என்னென்ன மோசடியில் ஈடுபட முடியுமோ அந்த வகைகளில் கைவரிசை காட்டியுள்ளனர். இடைத்தரகர்களுக்கு 20% முதல் 25 சதவீதம் வரை கமிஷனாக கொடுத்துள்ளனர்.

மகேஸ்வரன், ரியாஸ் உள்ளிட்ட நான்கு பேரையும் காவலில் எடுத்து விசாரித்தால், இவர்களின் மோசடி நெட்வொர்க் கும்பலைச் சேர்ந்த அனைவரும் சிக்குவார்கள் என காவல் ஆணையர் தெரிவித்தார்.

மேலும் மோசடி செய்து சம்பாதித்த பணத்தில் எங்கெங்கு சொத்துக்கள் வாங்கி வைத்திருக்கிறார்கள் என்பதை கண்டறியும் பணியிலும், அவர்களது வங்கி கணக்குகளை முடக்குவதற்கான நடவடிக்கையிலும் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

MUST READ