spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்கள்ளத்தொடர்புக்காக மனைவியை சரமாரியாக தாக்கிய கணவர் கைது 

கள்ளத்தொடர்புக்காக மனைவியை சரமாரியாக தாக்கிய கணவர் கைது 

-

- Advertisement -

சென்னை வண்ணாரப்பேட்டையில் புதியதாக திருமணமான பெண்ணின் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் கடந்த 10 வருடங்களாக கள்ளத்தொடர்பில் இருந்ததை  தட்டி கேட்ட மனைவியை கணவன் மற்றும் அவரது உறவினர்கள் அடித்து கொலை மிரட்டல் விடுத்து வீட்டை விட்டு விரட்டி விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கணவனை போலீசார் கைதுசெய்து சிறையி்ல் அடைந்தனர்.

கள்ளத்தொடர்புக்காக மனைவியை சரமாரியாக தாக்கிய கணவர் கைது 

we-r-hiring

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கிழக்கு கல்லறை சாலை தெருவைச் சேர்ந்தவர் திவ்யா(26), BA பட்டதாரி.

இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி அன்று கொருக்குப்பேட்டை முனுசாமி தெருவைச் சேர்ந்த வடிவேலு என்பவருடன்  பெற்றோர்கள் சம்மதத்துடன் பழைய வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள அன்னை மஹாலில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இதனையடுத்து திவ்யா, வடிவேலு வீட்டில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் வடிவேலு வேறு ஒரு பெண்ணிடம் கடந்த பத்து வருடங்களாக தொடர்பில் இருப்பது திவ்யாவுக்கு தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து கணவன் வடிவேலுவிடம் பல முறை அவளை விட்டு விடுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கு வடிவேலு விட்டு விடுவதாக கூறி மறுபடியும் கள்ள காதலியுடன்  தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

இதனா‌ல் மனம் உடைந்த திவ்யா தனது தாய் வீட்டுக்கு சென்று தனது தாய் தந்தையிடம் நடந்ததை கூறியுள்ளார்.ஆனால் வடிவேலுவின் பெற்றோர்கள் இந்த விஷயத்தில் மகனுக்கு அறிவுரை கூறாமல் ஒழுங்கா வாழு இல்ல உன் வீட்டுக்கு போ என திவ்யாவை வீட்டை விட்டு விரட்டி உள்ளனர்.

இதனையடுத்து கடந்த 4 தேதி அன்று திவ்யா 45 நாட்கள் கருவுற்றிருந்ததை
கூற வடிவேலு வீட்டார்  கருவை கலைத்து விடு என்று கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.  அதனை தொர்ந்து வடிவேலு, திவ்யா வீட்டிற்கு சென்று திவ்யாவையும் அவரது பெற்றோரையும் அவமதித்து திவ்யாவின் கூந்தலை இழுத்து பிடித்து இரும்பு தடி கொண்டு வடிவேலு மிருகத்தனமாக வெளியே தள்ளி கொலை மிரட்டல் விடுத்து கள்ள காதலியுடன் ஊர் சுற்றுவேன் உன்னால் முடிந்தால் தடுத்து பார் என ஏளனமாக பேசியுள்ளார்.

இதனால் மனமுடைந்த திவ்யா தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கணவர் வடிவேலுவை கைது செய்து நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள உறவினரை போலீசார் தேடி வருகின்றனர்.

போலியான வர்த்தக முதலீடு செய்ய வைத்து மோசடி செய்த வாலிபர் கைது

MUST READ