spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்கோவையில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவரும் தற்கொலை...!

கோவையில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவரும் தற்கொலை…!

-

- Advertisement -

கோவையில் மனைவியை சுத்தியால் அடித்து கொலை செய்த கணவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ள வினோபா நகரை சேர்ந்தவர் தாஸ் இவருக்கு மம்தா என்ற மனைவியும் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பாக கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த தாஸ் பக்கத்து வீட்டில் இருந்த சுத்தியை எடுத்து வந்து மனைவி மம்தாவின் தலையில் பலமாக தாக்கிவிட்டு தலைமறைவானார்.

we-r-hiring

இது தொடர்பாக கொலை முயற்சி பிரிவுகளில் கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தலையில் பலத்த காயமடைந்த மம்தா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் போலீஸாரிடமிருந்து தப்பிய தாஸ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. கொலை நடந்த மூன்று நாட்கள் ஆன நிலையில் கொலையாளி இருப்பிடம் பற்றிய தகவல் ஏதும் தெரியவில்லை.

கோவையில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவரும் தற்கொலை...!இதையடுத்து கொலையாளியை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை கருமத்தம்பட்டி பாலாஜி நகர் பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கிடப்பதாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு சடலமாக கிடந்தவர் மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த தாஸ் என்பது தெரிய வந்தது.

ஹைதராபாத் சம்பவம்: கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜுன் எப்படி பொறுப்பாக முடியும்..?

மனைவியை சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவத்தில் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தின் காரணமாக மதுவில் விஷம் அருந்தி கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரேத பரிசோதனைக்கு பின்னர் தான் தற்கொலை தொடர்பான முழு விவரம் தெரிய வரும் மனைவி சுத்தியலால் அடித்து கொலை செய்த கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே தாஸ்மீது இரண்டு போக்சோ சட்டமும் ஒரு கொலை வழக்கும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவையில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவரும் தற்கொலை...!மனைவியை கொலை செய்த வழக்கில் தற்கொலை செய்து கொண்ட அவரது கணவர் தாஸ் மீது இரண்டு போக்சோ வழக்குகள் இருந்துள்ளது முதல் சம்பவத்தில் போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்ட அவர் கடந்த ஒரு வருடங்களுக்கு முன் கருமத்தம்பட்டி சேடார் பாளையம் பகுதியில் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போஸ்கோ வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் உள்ளார். இந்நிலையில் மனைவியையும் கொலை செய்துவிட்டு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

MUST READ