Homeசெய்திகள்க்ரைம்பணத்துக்காக குழந்தைகள் கடத்தல் - போலீஸ் பிடியில் குற்றவாளிகள்

பணத்துக்காக குழந்தைகள் கடத்தல் – போலீஸ் பிடியில் குற்றவாளிகள்

-

பணத்துக்காக குழந்தைகள் கடத்தல் - போலீஸ் பிடியில் குற்றவாளிகள்

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் வீட்டில் இருந்த இரண்டு குழந்தைகளை பணத்திற்காக கடத்திச் சென்ற நபர்கள். குற்றவாளிகளை துப்பாக்கியால் சுட்டு கைது செய்த காவல்துறை குழந்தைகளை பத்திரமாக மீட்டியுள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் அதானி என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று மாலை இரண்டு குழந்தைகள் விளையாடு கொண்டிருந்தபோது அந்த வீட்டிற்குள் முகமூடி அணிந்து நுழைந்த இரு நபர்கள் குழந்தைகளை கடத்திச் சென்றிருக்கின்றனர்.

இந்த சம்பவம் அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி யில் பதிவாகி உள்ளது. குழந்தைகளின் தந்தை அதே பகுதியில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், அவரிடம் பணம் கேட்டு மிரட்ட குழந்தைகளை மர்மகும்பல் கடத்தியதாக தெரியவந்துள்ளது. உடனடியாக பெற்றோர்களிடம் புகார் பெற்ற காவல் துறை இரண்டு தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை தேடிய நிலையில் இன்று காலை பெலகாவி நகரிலேயே பதுங்கி இருந்த மூன்று குற்றவாளிகளையும் சுற்றி வளைத்து கைது செய்ய முயற்சித்துள்ளனர்.

பணத்துக்காக குழந்தைகள் கடத்தல் - போலீஸ் பிடியில் குற்றவாளிகள்

அப்போது குற்றவாளிகள் காவல்துறையை தாக்கி தப்பிக்க முயற்சித்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் பகுதியை சேர்ந்த சாம்பா ராவ் சப் கம்பேலே (25) என்ற குற்றவாளியின் காலில் துப்பாக்கியால் சுட்டு காவல்துறை கைது செய்துள்ளது. அவனுடன் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட கர்நாடக மாநிலம் சிக்கொடி என்ற பகுதியை சேர்ந்த ரவி கிரண் கமலாகர் (40) மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்த சாருக் சேக் ஆகியோரை காவல்துறை கைது செய்துள்ளனர்.

4 வயதான சுவஸ்தி மற்றும் 3 வயதான வியோம் ஆகிய இரண்டு குழந்தைகளையும் காவல்துறை பத்திரமாக மீட்டுள்ளனர். குற்றவாளிகள் காவல்துறையை தாக்கி தப்பிக்க முயற்சித்த போது இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்.

ஒரே நாளில் கடத்தப்பட்ட குழந்தைகளை காவல்துறை தனிப்படை அமைத்து துப்பாக்கி சூடு நடத்தி மீட்டுள்ள சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசு வேலை, போலி பணி நியமன ஆணை வழங்கி ரூ.1.47 கோடி மோசடி – இன்ஸ்பெக்டர் மீது அதிரடி நடவடிக்கை

 

MUST READ