Homeசெய்திகள்க்ரைம்ஆன்லைன் மூலம் பணம் மோசடி – ஒருவர் கைது!

ஆன்லைன் மூலம் பணம் மோசடி – ஒருவர் கைது!

-

சென்னை ஆவடியில் வசிக்கும் தனியார் நிறுவன ஊழியர் அபிதா. அவருக்கு சில நாட்களுக்கு முன், ‘டெலிகிராம்’ செயலி லிங்க் மூலம், பகுதி நேர வேலை வாய்ப்பு இருப்பதாக அவரது மொபைல் போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் சேர்ந்தால் தனக்கு நல்ல வருமானம் கிடைக்கும், கமிஷன் கிடைக்கும் என்று நம்பி அதில் கொடுக்கப்பட்ட இணைப்பில் சிக்கினார். அதன் பிறகு, ஆன்லைன் மூலமாக, அவரது வங்கி சேமிப்பில் இருந்து ரூபாய் 34.96 லட்சம் அபகரிக்கப்பட்டது தெரியவந்தது.

ஆன்லைன் மூலம் பணம் மோசடி – ஒருவர் கைது!

அதேபோல், பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஜூட் சுசில் அல்போன்ஸ் என்பவரிடமும், இதே போல 19. 56 லட்சம் ரூபாய் திருடப்பட்டது. இது குறித்து, ஆவடி மத்திய இணைய வழி குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதன் பிறகு, ஆவடி அடுத்த பட்டாபிராம், டிரைவர்ஸ் காலனியை சேர்ந்த மணிகண்டன் என்பவரை நேற்று கைது செய்தனர். பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தற்போது அவரின் கூட்டாளிகள் சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

MUST READ