தெலுங்கானாவில் 6 வயது சிறுவனை தாயார் கண்மூடித்தனமாக தாக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானா மாநிலம் ஜக்தியால் பகுதியை சேர்ந்தவர் ரமாதேவி. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனா். ராமதேவியின் கணவர் ஆஞ்சநேயர் வேலை நிமித்தமான பணிகளுக்காக துபாய் சென்று, அங்கு பணிபுரிந்து வந்துக் கொண்டிருக்கிறாா். இந்நிலையில் ராமதேவி அவரது இளைய மகனை தினந்தோறும் அடித்து கொடுமைபடுத்தி வருவதாக அக்கம் பக்கத்தினர் சில நாட்களாக எச்சரித்தும் அவர் கண்டுகொள்ளவில்லை. எனவே அக்கம் பக்கத்தினர் சிறுவனை கண்மூடித்தனமாக தாக்கும் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தாா்கள்.
இதனைக் கண்ட காவல்துறையினர் உடனடியாக ராமதேவியின் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த குழந்தையை மீட்டு குழந்தைகள் நல வாரியத்தில் அனுமதித்தனா். மேலும், போலீசார் ராமதேவியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பெண்ணுக்கு மனஅழுத்தம் உள்ளதா என்ற கோணங்களிலும் மருத்துவ சிகிச்சையும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவரது கணவர் ஆஞ்சநேயருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு பரபரப்பை ஏற்பட்டு வருகிறது.
செப்டிக் டேங்கில் குதித்து தற்கொலை முயற்சி! இரண்டு குழந்தைகள் பலி
