spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்மீட்பு பணிக்கு சென்ற பட்டாலியன் போலீசார் பாலியல் விவகாரத்தில் கைது…

மீட்பு பணிக்கு சென்ற பட்டாலியன் போலீசார் பாலியல் விவகாரத்தில் கைது…

-

- Advertisement -

நெல்லை மாவட்ட வெள்ள மீட்பு பணிக்கு சென்ற கடலூர் மாவட்ட போலீஸ் அங்கிருந்த பெண்ணுடன் பழகி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கைது.மீட்பு பணிக்கு சென்ற பட்டாலியன் போலீசார் பாலியல் விவகாரத்தில் கைது…கடலூர் மாவட்டம் முதுநகர் தொண்டமானத்தத்தை சேர்ந்த சம்பத்(28) என்பவர் உளுந்தூர்பேட்டை பட்டாலியனில் 2020 ஆம் ஆண்டு முதல் காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தின் மீட்பு பணிக்காக உளுந்தூர்பேட்டை பட்டாலியன் போலீசார் அங்கு மீட்பு பணிக்கு சென்றனர். அப்பொழுது திருநெல்வேலி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு பிரிவில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்த(28) வயது பெண் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டது. அதன் பிறகு இவர்களது தொடர்பு இன்ஸ்டாகிராம் மூலமாகவும் தொடர்ந்த நிலையில் தீபாவை கடலூருக்கு வரவைத்த காவலர் சம்பத் விடுதியில் அறை எடுத்து பலமுறை அவருடன் தவறாக நடந்துள்ளார்.

இந்நிலையில், அந்தப் பெண் கர்ப்பம் அடைந்ததை அடுத்து அந்த கருவை கலைக்க சம்பத் கூறியுள்ளார். அதனை கேட்டு அந்த பெண் கருவையும் கலைத்துள்ள நிலையில் தற்போது தனது ஊரிலேயே உறவு பெண் ஒருவரை சம்பத் காதலித்து வந்ததாக தெரியவந்ததை அறிந்த தீபா தன்னை காவலர் சம்பத் ஏமாற்றி விட்டதாக கூறி, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் புகார் மனுவை கொடுத்தார்.

we-r-hiring

இந்த புகாரை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய கடலூர் அனைத்து மகளிர் காவலர்களுக்கு உத்தரவிட்டார். கடலூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்ட விசாரணையில் தீபா கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்று என்பதாலும் தீபாவை திருமணம் செய்ய சம்பத் மறுத்த காரணத்தினாலும் அவரை கடலூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். மேலும் தீபாவுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை…

MUST READ