ரிதன்யா தற்கொலை வழக்கில் கைதான மாமனார் ஈஸ்வரமூர்த்தி, கணவர் கவின்குமார் மீதான ஜாமீன் மனு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மாமியாா் சித்ரா தேவி தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளாா்.திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூரை சேர்ந்தவர் அண்ணாதுரை (53). பனியன் நிறுவன அதிபர். இவரது மனைவி ஜெயசுதா (42). இவா்களுக்கு ரிதன்யா (27) என்ற ஓரே மகள். இவா் எம் எஸ் சி பட்டதாரி. கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி ரிதன்யாவுக்கும், அதே பகுதியில் உள்ள ஜெயம் கார்டனை சேர்ந்த கவின்குமார் என்பவருடன் (27) திருமணம் நடைபெற்றது. இவர் கார்மெண்ட்ஸ் டிரேடிங் என்ற கம்பெனியின் உரிமையாளர். இவரது தந்தை ஈஸ்வரமூர்த்தி மற்றும் தாய் சித்ராதேவி திருமணத்தின் போது ரிதன்யா வீட்டாரிடம் 300 பவுன் நகையும், மாப்பிள்ளைக்கு ரூ.70 லட்சத்திற்கு சொகுசு காரும் வரதட்சணையாக வாங்கியுள்ளனா். ரிதன்யா தந்தை அண்ணாதுரை ரூ.2.25 கோடி செலவு செய்து பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் 28 ஆம் தேதி கோயிலுக்கு செல்வதாக காரில் புறப்பட்ட ரிதன்யா புதூரில் காருக்குள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தனது தந்தையின் வாட்ஸ் அப்பிற்கு கதறி அழுதபடி உருக்கமான ஆடியோ ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், வரதட்சணையாக கொடுத்த 300 பவுன் நகை போதாது, மேலும் 200 சவரன் நகை வேண்டும் என்று கேட்டு தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மற்றும் அவரது குடும்பத்தினா் தொடர்ந்து சித்ரவதை செய்ததாகவும் கூறியிருந்ததாா். அது அனைவரது நெஞ்சையும் பதறவைத்தது.

மேலும், ரிதன்யாவின் தற்கொலைக்கு காரணமான அவரது கணவர் கவின்குமார் மற்றும் அவரது பெற்றோர் ஈஸ்வரமூர்த்தி- சித்ராதேவி ஆகியோர் தான் என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக, சேவூர் போலீசார் வழக்குப்பதிந்து ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரை கைது செய்தனர். மாமியார் சித்ராதேவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவரை கைது செய்யவில்லை. அதன்பின், அவர் தலைமறைவானார்.
இந்நிலையில், இந்த வழக்கில் ரிதன்யாவின் கணவர் கவின்குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு நேற்று (3ம் தேதி) திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவின் மீது இடையீட்டு மனு தாக்கல் செய்த ரிதன்யாவின் பெற்றோர், ஜாமீன் வழங்கக்கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், நீதிபதி ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது ஜாமீன் மனுவை ஜூலை 7ம் தேதிக்கு ஒத்திவைத்து திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும், திருப்பூா் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் ரிதன்யா தந்தை மனு ஒன்றை அளித்துள்ளாா். அதில், ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள ரிதன்யாவின் மாமனாா் மற்றும் அவரது கணவருக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் ரிதன்யா வழக்கில் அவரது மாமியாரையும் கைது செய்ய வேண்டும் என்று குறிப்பிடபட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், ரிதன்யாவின் மாமியாா் சித்ரா தேவியின் உடல்நிலை சாியில்லை என்று கைது செய்யாமல் இருப்பதை ஏற்க முடியாது எனவும், கணவா் கவின் குமாா் பேசிய செல்போன் பதிவுகளை கையப்படுத்தி விசாாிக்க வேண்டும் எனவும் ரிதன்யாவின் தந்தை பேட்டியளித்துள்ளாா்.
இந்நிலையில் ரிதன்யாவின் தற்கொலை வழக்கில் அவரது கணவா் மற்றும் மாமனாா் கைது செய்யப்பட்ட நிலையில், மூன்றாவது குற்றவாளியான அவரது மாமியாா் சித்ரா தேவி தனிப் படை போலீசாரால் கைது செய்யப்பட்டாா். எந்த பிாிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள என்ற தகவல் இனிமேல் தான் தொிய வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
திருநின்றவூரில் விசிக பெண் கவுன்சிலர் வெட்டிக் கொலை-கணவர் கைது