spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்வீட்டின் பூட்டை உடைக்காமல் கொள்ளையர்களின் கைவரிசை…

வீட்டின் பூட்டை உடைக்காமல் கொள்ளையர்களின் கைவரிசை…

-

- Advertisement -

கேளம்பாக்கம் அருகே பூட்டிய வீட்டில் 30 சவரன் தங்க நகைகள், 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி நகைகள், 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வீட்டின் பூட்டை உடைக்காமல் கொள்ளையர்களின் கைவரிசை…கேளம்பாக்கத்தை அடுத்த வெளிச்சை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. கொத்தனார் வேலை செய்து வந்த இவர் மனைவி செளந்தரி இறந்துவிட்டதால், மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டு தனியாக  வசித்து வருகிறார். வீட்டை தினமும் பூட்டி விட்டு சாவியை மாடிப் படியில் வைத்து விட்டு செல்வார். நேற்று மாலை 6 மணிக்கு வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்தார். வழக்கம் போல் மாடிப்படி கீழிருந்து சாவியை எடுத்து வீட்டிற்கு சென்று பீரோவை திறந்து பார்த்த போது பீரோவில் இருந்த தனது மனைவிக்கு சொந்தமான 30 சவரன் தங்க நகைகளை காணவில்லை.

தன்னை பின் தொடர்ந்து சாவி வைக்கும் இடத்தை அறிந்து வீட்டின் பூட்டை உடைக்காமல் சாவி மூலம் திறந்து 30 சவரன் தங்க நகைகள், 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி நகைகள், 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை யாரோ திருடி சென்றிருப்பதாக கருதி கேளம்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.

we-r-hiring

இதுகுறித்து, கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். மேலும், மோப்ப நாய் மற்றும் கைரேகை பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து கேளம்பாக்கம் போலீசார் இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

போலி நிறுவனம் மூலம் மோசடியில் ஈடுபட்ட ஏஜெண்ட் கைது…

MUST READ