spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்சம்போ செந்திலின் கூட்டாளி வெளிநாட்டிற்கு எஸ்கேப்

சம்போ செந்திலின் கூட்டாளி வெளிநாட்டிற்கு எஸ்கேப்

-

- Advertisement -

சம்போ செந்திலின் கூட்டாளி வெளிநாட்டிற்கு எஸ்கேப்ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்படக்கூடிய ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி வெளிநாட்டிற்கு தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய நபராக பார்க்கக்கூடிய சம்போ செந்தில் தலைமறைவாகி உள்ள நிலையில் அவரது கூட்டாளி கிருஷ்ணன் கைது செய்யப்பட்ட ஹரிஹரனுடன் நெருக்கமாக இருந்த நிலையில் கிருஷ்ணன் வெளி நாட்டிற்கு தப்பி சென்றிருப்பது போலீசார் விசாரணையில் தகவல்  தெரிய வருகிறது.

வழக்கறிஞர் ஹரிஹரன் கைது செய்யப்பட்ட உடன் கிருஷ்ணன், சிவா உட்பட மூன்று பேர் காரில் திருச்சென்றந்தூர் சென்றதும், அதன் பிறகு காரிலேயே மதுரை சென்றுள்ளனர். அதன் பிறகு கிருஷ்ணன் தனது காரை சிவாவிடம் கொடுத்து சென்னைக்கு செல்லும் படி அறிவுறுத்தியுள்ளார். சென்னைக்கு வந்தவுடன் வழக்கறிஞர் சிவா காவல்துறையிடம் வசமாக சிக்கிக்யுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 20 நபர்களின் சொத்துக்கள் முடக்கம்

we-r-hiring

பின்னர் கிருஷ்ணன் விமானம் மூலமாக குடும்பத்துடன் தாய்லாந்திற்கு தப்பி சென்றிருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

MUST READ