spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்6 ஆண்டுகளாக தமிழக போலீஸுக்கு டிமிக்கி... இலங்கை முன்னாள் எம்பி புழல் சிறையில் அடைப்பு..!

6 ஆண்டுகளாக தமிழக போலீஸுக்கு டிமிக்கி… இலங்கை முன்னாள் எம்பி புழல் சிறையில் அடைப்பு..!

-

- Advertisement -

போலியான முகவரி மூலமாக பாஸ்போர்ட் எடுத்த  இலங்கை முன்னால் எம்பி திலீபனை கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.6 ஆண்டுகளாக தமிழக போலீஸுக்கு டிமிக்கி... இலங்கை முன்னாள் எம்பி புழல் சிறையில் அடைப்பு..!கடந்த 2019 ஆம் ஆண்டு  மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தை மையமாகக் கொண்டு இலங்கையை சேர்ந்த முன்னால் எம்பி திலீபன்  மற்றும் இலங்கை அகதிகள் பலர்  போலியான முகவரி மூலம் பாஸ்போர்ட் பெற்று சென்றிருப்பது தெரியவந்தது . இந்த வழக்கை  கியூ பிராஞ்ச் போலீசார் விசாரிக்க உத்தரவிடபட்டது.  இந்த விவகாரம் தொடர்பாக அதிதாரிகள் மற்றும் இலங்கையை சேர்ந்த பலர் மீது வழக்கு தொடரப்பட்டது. போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக  இலங்கையின் ஈபிடிபி கட்சியின்  முன்னால் எம்.பி திலீபன் மீது  இந்தியாவில் உள்ள அனைத்து  விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 11ந்தேதி கொச்சி விமானநிலையம் வந்த திலீபனை கொச்சியில் குடியுரிமை அதிகாரிகள் பிடித்து மதுரை கியூ பிராஞ்ச் போலீசாரிடம் ஒப்டைத்தனர். போலீசார் அவரை மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மனைவியிடம் தவறாக நடந்தால் அந்தமான் சிறைதான்… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

we-r-hiring

MUST READ