spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்தெலுங்கானா - வாக்கிங் சென்ற சி.பி.ஐ. கட்சி தலைவர் சுட்டுக் கொலை…மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

தெலுங்கானா – வாக்கிங் சென்ற சி.பி.ஐ. கட்சி தலைவர் சுட்டுக் கொலை…மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

-

- Advertisement -

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மலக்பேட்டையில் வாக்கிங் சென்று கொண்டுருந்த சி.பி.ஐ. கட்சி தலைவர் மீது மிளகு ஸ்ப்ரே அடித்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை.தெலுங்கானா - வாக்கிங் சென்ற சி.பி.ஐ. கட்சி தலைவர் சுட்டுக் கொலை…மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சுதெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டம் அச்சம்பேட்டையைச் சேர்ந்த சிபிஐ கட்சியின் மாநில கவுன்சில் உறுப்பினரும் இடதுசாரித் தலைவருமான சந்து நாயக் ஐதராபாத் மலக்பேட்டையில் வசித்து வருகிறார். இன்று காலை வழக்கம்போல் ஷாலிவாஹன நகரில் உள்ள பூங்காவிற்கு சந்து நாயக் அவரது மனைவி மற்றும் மகளுடன் வாக்கிங் சென்று கொண்டுருந்தார். அப்போது அங்கு காரில் வந்த சிலர் சந்து நாயக்கை தடுத்து நிறுத்தி அவர் மீது மிளகு ஸ்ப்ரே அடித்து நான்கு சுற்று துப்பாக்கியால் சுட்டு தப்பி சென்றனர்.தெலுங்கானா - வாக்கிங் சென்ற சி.பி.ஐ. கட்சி தலைவர் சுட்டுக் கொலை…மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சுஇதில் சந்து நாயகிற்கு கடும் இரத்தப்போக்கு ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே இறந்தார். என்ன நடக்கிறது என்று புரியாமல் சுற்றியிருந்த மக்கள் பீதியடைந்தனர்.  தகவல் கிடைத்ததும், போலீசார் ஷாலிவாஹனநகர் பூங்காவை அடைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு பூங்கா அருகே சிசிடிவி கேமராக்கள் காட்சிகளை சேகரித்து துப்பாக்கிச் சூட்டிற்கான காரணங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மகளிர் உரிமைத் தொகை பெற குவிந்த பெண்களை பார்த்து அதிர்ச்சியடைந்த அமைச்சர்!

MUST READ