Homeசெய்திகள்க்ரைம்பூட்டியிருந்த வீட்டில் கொள்ளையர்களின் துணிகரம்! போலீசார் விசாரணை…

பூட்டியிருந்த வீட்டில் கொள்ளையர்களின் துணிகரம்! போலீசார் விசாரணை…

-

- Advertisement -

வடபழனி, ராகவன் காலனி பிரதான சாலையில் போஜராஜா என்பவருடைய வீட்டை உடைத்து சுமார் 10 கிலோ வெள்ளி, 40 சவரன் தங்க நகைகள், குத்து விளக்கு இரண்டு, பூஜை சாமான்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை திருடியுள்ளனா் என வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனா்.பூட்டியிருந்த வீட்டில் கொள்ளையர்களின் துணிகரம்! போலீசார் விசாரணை…போஜராஜா என்பவர் மும்பையில் வசித்து வரும் நிலையில் அவரது தந்தை பிலிம் டிஸ்ட்ரிபியூட்டர் பிரேம் ஆனந்த் என்பவர் இதய நோய் காரணமாக சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், 10 நாட்களுக்கு ஒரு முறை வீட்டு பணியாளர்கள் வந்து வீட்டை சுத்தம் செய்து வருகின்றனர்.

வீட்டு பணியாளர் நேற்று வந்து பார்த்த போது, வீடு கதவுகள் திறந்திருப்பதாக பிரேம் ஆனந்த் என்பவருக்கு தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அவரது மகன் போஜராஜா என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அவர் மும்பையில் இருந்து வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டிலிருந்து பொருட்கள் திருடு போயிருப்பது தெரிய வந்தது. அவர்கள் அளித்த புகாரின் பேரில் வடபழனி போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனா்.

ஐ.பி.எல் போட்டிகள் ரத்து! பிசிசிஐ அறிவிப்பு…

MUST READ