spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்ஆட்டிசம் பாதித்த வாலிபரை அடித்து கொன்ற பெண் டாக்டர் தலைமறைவு!

ஆட்டிசம் பாதித்த வாலிபரை அடித்து கொன்ற பெண் டாக்டர் தலைமறைவு!

-

- Advertisement -

பொள்ளாச்சி காப்பகத்தில் ஆட்டிசம் பாதித்த வாலிபரை அடித்து கொன்று புதைத்த வழக்கில் பெண் டாக்டர் உள்பட ஜந்து பேர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க 8 தனிப்படையும் மற்றும் வெளிநாடு தப்பிச்செல்லாமல் தடுக்க லுக்அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.ஆட்டிசம் பாதித்த வாலிபரை அடித்து கொன்ற பெண் டாக்டா் தலைமறைவு! கோவை அருகே சோமனூரை சேர்ந்த ரவிக்குமார் என்பவரது மகன் வருண்காந்த் (22).  இவா் ஆட்டிசம் எனும் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர். இவரை, பொள்ளாச்சி மகாலிங்கபுரம் முல்லை நகரிலுள்ள ஒரு தனியார் காப்பகத்தில் சேர்த்துள்ளனா். இந்த காப்பகத்தை, பொள்ளாச்சியை சேர்ந்த சாஜு, கிரிராஜ், டாக்டர் கவிதா ஆகியோர் நடத்தி வருகின்றனர்.

கடந்த 12-ம் தேதி காப்பகத்தில் வருண்காந்தை கட்டையால் அடித்துக்கொன்று, நடுப்புணி அருகே பி.நாகூரில் உள்ள காப்பக நிர்வாகி டாக்டர் கவிதா என்பவரது தோட்டத்தில் சாணம் அடைத்த பாலித்தின் பையில் அடைத்து குழிதோண்டி புதைத்து மேல் பகுதியில் செடி நட்டு வைத்தனர். காவல்துறையினரை குழப்ப இதே இடத்தில் 6 குழிகளை வெட்டினர். இதுகுறித்து அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து காப்பக பாதுகாப்பாளர் ரித்தீஷ் (26), நிர்வாகி கிரிராம் (36), ஊழியர் ரங்கநாயகி (32), செந்தில்பாபு (55) ஆகியோரை கைது செய்தனர்.

we-r-hiring

வருண்காந்த் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த கொலையில் முக்கிய குற்றவாளியாக உள்ள டாக்டர் கவிதா, சாஜு உள்பட 5 பேர் தலைமறைவாக உள்ளனர். இவர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க பன்னாட்டு விமான நிலையம், துறைமுகங்களில் லுக்அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

26-வது ஆசிய தடகள போட்டி… இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம்…

MUST READ