spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்தலையில் கல்லைப் போட்டு பெண் கொலை

தலையில் கல்லைப் போட்டு பெண் கொலை

-

- Advertisement -

மனைவி தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த கணவன் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

 தலையில் கல்லைப் போட்டு கொலை பெண் கொலை
கொலை செய்த மாரியப்பன்

நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி தேவந்திரர் பகுதியில் மனைவி சின்னபொன்னுடன் (57) வசித்து வருகிறார் மாரியப்பன்(60). இவர் கூலி வேலைக்கு செல்லும் நிலையில் இவருக்கு சின்ராசு, கோபால் என்ற இரு மகன்கள் உள்ளனர் இவர்களும் கூலி வேலைக்கு செல்கின்றனர்.

we-r-hiring

இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாகவே சொந்த நிலத்தை விற்பதற்க்கு மாரியப்பன் முயற்சி செய்து வந்ததாகவும், நிலத்தை விற்கக் கூடாது என மனைவி சின்னபொண்ணு தடுத்து வந்ததாகவும் இதனால் இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் நிலம் விற்பனை தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் இனி இவள் இருந்தால் நிலத்தை விற்க முடியாது என எண்ணிய மாரியப்பன் மனைவி தூங்கிய போது அருகில் இருந்த ஹோலோ பிரிக்ஸ் கல்லை எடுத்து தலையில் போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார்.

 தலையில் கல்லைப் போட்டு கொலை பெண் கொலை
மனைவி சின்னப்பொண்ணு

இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவியுடனே இரவு முழுவதும் தங்கிவிட்டு காலை பேளுக்குறிச்சி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார் மாரியப்பன். சம்பவ இடத்திற்கு ராசிபுரம் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்ட நிலையில் கணவர் மாரியப்பனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

MUST READ