வீட்டுக்குள் திருடர்கள் இருப்பதை நெதர்லாந்தில் இருந்தபடி அறிந்த நெதர்லாந்தில் இருந்தபடி கொடுத்த தகவலின்படி திருடா்கள் கைது செய்யப்பட்டனா்.
சென்னை மேற்கு மாம்பலம் சீனிவாசன் பிள்ளை தெருவை சேர்ந்த வெங்கட்ரமணன் (58), நெதர்லாந்தில் வசிக்கும் தனது மகனை பார்ப்பதற்காக கடந்த 04-ம் தேதி மனைவி கலாவுடன் சென்றுள்ளாா். இந்நிலையில், இன்று அதிகாலை 1.40 மணிக்கு வீட்டில் உள்ள தண்ணீர் மோட்டாரை அந்நிய நபர்கள் தொட்டதும், நெதர்லாந்தில் இருக்கும் வெங்கட்ரமணனின் செல்போனில் எச்சரிக்கை அலாரம் அடித்துள்ளது. தனது செல்போன் மூலம் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, அந்நிய நபர்கள் இருவர் வீட்டுக்குள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பக்கத்து வீட்டைச் சேர்ந்த வெங்கடசுப்பிரமணியன் என்பவரை, வெங்கட்ரமணன் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.
அவர் காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவித்ததால், இரவு ரோந்து பணியில் இருந்த, அசோக் நகர் காவல் நிலையத்தின் அனைத்து போலீசாரும், சம்பவ இடத்திற்கு வந்து சீனிவாசன் பிள்ளை தெரு மற்றும் அருகில் உள்ள தெருக்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனாா்கள். அப்போது பக்தவச்சலம் தெருவில் திருடர்கள் இருவர் நின்று கொண்டுள்ளனாா். பல்லாவரத்தைச் சேர்ந்த பிரபல திருடன் கமலக்கண்ணன் வயது (65), திருப்பத்தூரை சேர்ந்த ஆரி பிலிப்(57) இருவரையும் போலீசார் கைது செய்தாா்கள். வெங்கட்ரமணன் வீட்டில் திருடிய ஆறு சவரன் நகை, வெளிநாட்டு டாலர் ரூபாய் நோட்டுகள் 27, அரை கிலோ வெள்ளி இரண்டு தங்க வளையல், ஒரு வாட்ச் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனா்.
சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ: கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு துறை