Homeசெய்திகள்க்ரைம்துரிதமாக செயல்பட்டு வீட்டை பூட்டிய நபர்…வசமாக சிக்கிய திருடன்!

துரிதமாக செயல்பட்டு வீட்டை பூட்டிய நபர்…வசமாக சிக்கிய திருடன்!

-

- Advertisement -

வீட்டை உடைத்து திருடச் சென்ற திருடன், போலீஸ் வருவதை அறிந்து கதவை பூட்டி கட்டிலுக்கு அடியே பதுங்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துரிதமாக செயல்பட்டு வீட்டை பூட்டிய நபர்…வசமாக சிக்கிய திருடன்!

 

சென்னை கிழக்கு முகப்பேர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கென்னடி (52). சென்னை உயர்நீதிமன்றத்தில் ஊழியராக பணிபுரிந்து வரும் இவர், கடந்த 5-ம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டத்திற்கு குடும்பத்தோடு சென்றுள்ளார். இந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணி அளவில் கென்னடியின் வீட்டின் கதவை உடைக்கும் சத்தம் அக்கம்பக்கத்தினருக்கு கேட்டுள்ளது. இதனையடுத்து முதல் தளத்தில் வசித்து வரும் மோகன பிரியன் என்பவர் கீழே உள்ள கென்னடி என்பவரின் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் கதவை உடைத்து உள்ளே செல்வதும் உள்ளே சென்று திருட்டுச் செயலில் ஈடுபடுவதையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனையடுத்து சுதாரித்த மோகன பிரியன் சத்தமிட்டால் திருடன் தப்பி ஓடிவிடுவான் என நினைத்து தனது வீட்டில் இருந்து பூட்டை எடுத்து வந்து கென்னடியின் வீட்டின் கிரில் கேட்டை பூட்டி திருடன் தப்பித்து செல்லாதவாறு பார்த்துக் கொண்டு ஜே.ஜே.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பூட்டை திறந்த போது உள்ளே இருந்த திருடன் போலீஸ் வருவதை கண்டு கதவை உள்பக்கமாக தாழ்த்திக் கொண்டுள்ளார். நீண்ட நேரமாக போலீசார் கதவை திறக்க சொல்லியும் திறக்காததால் ஜே.ஜே நகர் தீயணைப்புத்துறையினருக்கு போலீசார் தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜே.ஜே நகர் தீயணைப்பு வீரர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது திருடன் உள்ளே இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தப்பிக்க வேறு வழிகள் இல்லை என்பதால், தீயணைப்புத்துறையினரும், போலீசரும் வீட்டை முழுவதுமாக சோதனையிட்ட போது திருடன் கட்டிலுக்கு அடியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து திருடனை கைது செய்து செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணையில் ஈடுப்பட்டனர்.

விசாரணையில் திருடன், கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (எ) ஓட்ட பாலா(27) என்பது தெரியவந்தது. மேலும், பாலமுருகன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 10 க்கும் மேற்ப்ட்ட திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.  இதனையடுத்து கைது செய்யப்பட்ட பாலமுருகனிடம் ஜே.ஜே நகர் போலீசார் தொடர் விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.சென்னையில் வீட்டை உடைத்து திருட சென்ற திருடன் போலீசார் வருவதை அறிந்து கட்டிலுக்கு கீழே பதுங்கிக் கொண்ட சம்பவமும் பின் கதவை உடைத்து போலிசாரால் கைது செய்யப்பட்ட சம்பவமும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெதர்லாந்தில் இருந்த படி திருட்டை கண்டுபிடித்த வீட்டின் உாிமையாளா்! திருடா்கள் கைது…

MUST READ