துறைமுக உதவி மேலாளர் வீட்டில் இருந்து 25 சவரன் நகை திருட்டு. பால்கனி கதவை உடைத்து உள்ளே நுழைந்து கைவரிசை காட்டிய நபரை போலீசார் கைது. காவல்துறை விசாரணையில் மேலும் இரண்டு ஐஸ் ஹவுஸ் மற்றும் ஜாம்பாஜர் உள்ளிட்ட இரண்டுகளில் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
சென்னை ராயப்பேட்டை முத்தையா 2 வது தெருவை சேர்ந்தவர் ராமானுஜன் (56). இவர் சென்னை துறைமுகத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி உமா(54) எல்.ஐ.சி நிறுவனத்தில் காசாளராக பணியாற்றி வருகிறார்.
ராமானுஜன் தனது குடும்பத்துடன் கதவை உள்பக்கம் பூட்டி கொண்டு இரவு தூங்க சென்றுள்ளார். பால்கனி வழியாக உள்ளே வந்த நபர் பால்கனி கதவை உடைத்து வீட்டின் உள்ளே சென்று பீரோவில் இருந்த 2 தங்க நெக்லஸ், 1 காசுமாலை, 3 செயின், வளையல், தோடு, தங்க கட்டி உட்பட சுமார் 25 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார்.
காலையில் ராமானுஜன் எழுந்து பார்த்த போது பீரோ கதவுகள் திறக்கப்பட்டு பிரோவில் வைத்திருந்த தங்க நகைகள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அங்கு வந்த போலீஸார் சம்பவயிடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
பிறகு இந்த சம்பவம் குறித்து ஜான்பாஜர் காவல் நிலைய ஆய்வாளர் கமலாதேவி ( பொறுப்பு) தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி கேமிரா பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அதே தெருவில் உள்ள ஒரு வீட்டின் மூன்றாவது தெருவில் உள்ள வீட்டிலும் ஒரு நபர் செல்போன் திருடி சென்றது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஜாம்பஜார் காவல் நிலைய ஆய்வாளர் கமலாதேவி தலைமையிலான தனிப்படையினர் இரண்டு திருட்டிலும் ஈடுபட்ட நபரின் சிசிடிவி காட்சிகளை ஒப்பிட்டு பார்த்தபோது ஒரே நபர் இரண்டு இடங்களிலும் கைவரிசையை காட்டியது கண்டுபிடித்தனர்.
பிறகு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் அடுத்தடுத்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாக வைத்து பின் தொடர்ந்து தீவிரமாக விசாரணை செய்து இரண்டு திருட்டு வழக்குகளிலும் தொடர்புடைய நபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ராயபுரம் பகுதியை சேர்ந்த ராஜு என்கிற பாக்கு ராஜு 37 என்பவர் இரண்டு இடங்களிலும் திருடியதை ஒப்புக்கொண்ட நிலையில் கைது செய்யப்பட்ட ராஜுவிடம் இருந்து திருடி செல்லப்பட்ட நகைகள் மற்றும் செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் விசாரணையில் கடந்த ஜனவரி மாதம் ஜாம் பஜார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு வீட்டில் 4 செல்போன்களை ராஜு திருடி கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று வந்த நிலையில் தொடர்ந்து ஐஸ் ஹவுஸ், ஜாம் பஜார் உள்ளிட்ட திருடியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. பிறகு கைது செய்யப்பட்ட ராஜு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.