spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுக்க வந்த பெண் – நகையை பறிகொடுத்த பரிதாபம்

வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுக்க வந்த பெண் – நகையை பறிகொடுத்த பரிதாபம்

-

- Advertisement -

செங்குன்றத்தில் வீட்டிற்குள் புகுந்து இரண்டு வயது குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 10 சவரன் நகை பறிப்பு. மர்ம நபர்கள் இருவருக்கு போலீஸ் வலை வீச்சு.

வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுக்க வந்த பெண் – நகையையும் பறிகொடுத்த பரிதாபம்திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த வடகரையை சேர்ந்தவர் வீரம்மாள். கணவர் இறந்த நிலையில் தனது மூன்று மகன்களுடன் வீரம்மாள் வசித்து வருகிறார். இவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த மகாலட்சுமி என்பவர் வீட்டு அட்வான்ஸ் தொகை கொடுப்பதற்காக வீரலட்சுமி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அந்த நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் இருவர் வீரலட்சுமியின் இரண்டு வயது குழந்தை கிருஷ்ணாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பெண்களிடம் நகையை கொடுக்குமாறு மிரட்டி உள்ளனர்.

we-r-hiring

இதனை அடுத்து வீரலட்சுமி, மகாலட்சுமி இருவரும் தங்கள் கழுத்தில் அணிந்திருந்த 10ஸ்வரன் செயின், தாலி சரடு, மோதிரங்களை கொடுத்துள்ளனர். மேலும் வெள்ளி கொலுசு, மெட்டி ஆகியவற்றையும் மர்ம நபர்கள் கழட்டுமாறு கூறி அவர்கள் வைத்திருந்த இரண்டு செல்போன்கள், 20 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் பறித்து கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றுள்ளனர்.

இதுகுறித்து வீரலட்சுமி செங்குன்றம் காவல்துறைக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் போலீசார் அருகிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டிற்குள் புகுந்து 2 வயது குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து பெண்களிடம் இருந்து 10 சவரன் நகை, 20000 ரொக்கம் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உணவு டெலிவரி  செய்த பெண் ஊழியரிடம் ஆபாச பேச்சு – இருவர் கைது

MUST READ