Homeசெய்திகள்மாவட்டம்நாமக்கல் மாவட்டத்தில் நாட்டு வெடி வெடித்து 4 பேர் பலி. பலர் காயம்

நாமக்கல் மாவட்டத்தில் நாட்டு வெடி வெடித்து 4 பேர் பலி. பலர் காயம்

-

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடி, பட்டாசுகள் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. அதில் பட்டாசுக் கடை உரிமையாளர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமானது. மேலும் ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டுத்தெருவில் வசித்து வந்தவர் தில்லைக் குமார். இவர் பட்டாசுகடை நடத்துவதற்கான உரிமம் பெற்று மோகனூர் கடைவீதி பகுதியில் தில்லை பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு கடை நடத்தி வருகிறார்.‌ இவருக்கு பட்டாசுகளை பாதுகாப்பாக வைக்க ஓடப்பாலையம் என்ற இடத்தில் குடோன் உள்ளது.

இன்று மாலை புத்தாண்டு கொண்டாட்ட விற்பனைக்காக இவரது வீட்டில் நாட்டு வெடி மற்றும் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த வெடிகள் நள்ளிரவில் பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்து சிதறியுள்ளது. இந்த வெடி விபத்தில் வீடு முழுவதும் தரைமட்டமானது. வெடி விபத்தில் அந்த வீட்டிற்கு அருகே வசித்து வந்த மூதாட்டி பெரியக்காள் (73) என்பவர் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அனைத்தனர். வெடி விபத்தில் தூக்கி வீசப்பட்ட தில்லைகுமார் உடல் 100 மீட்டருக்கு அப்பால் உள்ள ஒரு வீட்டின் மேற்கூறையில் இருந்து மீட்கப்பட்டது. மேலும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த தில்லைகுமாரின் மனைவி பிரியங்கா, தாயார் செல்வி ஆகியோரின் உடல்கள் இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்டனர்.

வெடி விபத்தில் அப்பகுதியில் உள்ள 15 க்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
இந்த வெடி விபத்தில் படுகாயம் அடைந்த ஐந்து பேர் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டாசு வெடிவிபத்து நடந்த இடத்தை சேலம் சரக டி.ஐ.ஜி பிரவின் குமார் அபிநவ் ஆய்வு செய்தார். நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

MUST READ