spot_imgspot_img
Homeசெய்திகள்மாவட்டம்கரும்பு விற்பனை மந்தம்…வியாபாரிகள் வேதனை…

கரும்பு விற்பனை மந்தம்…வியாபாரிகள் வேதனை…

-

- Advertisement -

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தஞ்சை கரந்தை சிஆர்சி டிப்போ பகுதியில் கரும்பு விற்பனைக்காக கொண்டு வந்து வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.கரும்பு விற்பனை மந்தம்…வியாபாரிகள் வேதனை…பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளன. பொங்கல் பண்டிகை அன்று காலை குளித்து விட்டு புத்தாடை அணிந்து வீட்டின் முன்பு புதுப்பானையில் பொங்கலிட்டு, சூரியனுக்கு படைத்து வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இந்த பொங்கல் பண்டிகையின் போது அச்சு வெல்லம், பச்சரிசி, நெய், முந்திரி, திராட்சை, கரும்பு, இஞ்சி, மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொருட்களுக்கு அதிக தேவை ஏற்படும்.

தற்போதே, பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இதற்கு ஏற்றாற்போல் பொங்கல் பண்டிகையில் முக்கிய இடத்தை பிடித்துள்ள கரும்புகள் விற்பனையும் தொடங்கி உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் பொங்கல் கரும்பு சாகுபடி 700 ஏக்கருக்கும் அதிகமாக நடந்தது. ரேஷன் கடைகளுக்கு கரும்புகள் கொள்முதல் செய்த நிலையிலும், வியாபாரிகளும் கரும்புகளை வாங்கி வந்து ஆங்காங்கே விற்பனைக்காக குவித்து வைத்துள்ளனர்.

we-r-hiring

தஞ்சையை அடுத்த சூரக்கோட்டை, துறையூர், திருக்காட்டுப்பள்ளி, திருவோணம், வெட்டிக்காடு, மாரியம்மன்கோவில், சாலியமங்கலம், கம்பர்நத்தம், குளிச்சப்பட்டு, ராராமுத்திரைக்கோட்டை, வாளமரக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கரும்புகள் நடவு செய்யப்பட்டு தற்போது கரும்பு அறுவடை மும்முரமாக நடந்து வருகிறது. தஞ்சை சிஆர்சி டிப்போ பகுதியில் பொங்கல் கரும்புகள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.

10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டின் விலை ரூ.350 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது. ஆனால் கடந்த 2 நாட்களாக லேசான மழைத்தூறலுடன் கடும் குளிர் நிலவி வருகிறது. பகல் முழுவதும் குளிர்ந்த காற்று வீசுவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டமும் குறைந்து காணப்படுகிறது. இதனால் கரும்பு விற்பனையும் மந்தமாக காணப்படுகிறது.

கரும்பு கட்டுகளை வியாபாரிகள் விற்பனைக்காக வரிசையாக அடுக்கி வைத்திருந்த போதிலும் விற்பனை குறைந்த அளவே இருப்பதால் யாராவது கரும்பு வாங்க வருவார்களா? என வியாபாரிகள் காத்திருந்த வண்ணம் உள்ளனர்.

பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் விற்பனை அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. தற்போது பொங்கல் சீர் வரிசை கொடுப்பவர்கள் மட்டுமே கரும்புகளை வாங்கி சென்ற வண்ணம் உள்ளனர் என வியாபாரிகள் வருத்தம் தெரிவித்தனர்.

சுமார் ரூ.2 கோடி அளவிலான தங்க கட்டியை கொள்ளையடிக்கப்பட்ட 3 மணிநேரத்திற்குள் போலீசார் மீட்டு சாதனை…

MUST READ